Thursday, December 14, 2017

.
Breaking News

இறந்த இதயங்களை உயிர்ப்பிக்கும் அதிசய கருவி!

ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு திடீரென்று ஏற்படும் மாரடைப்பு அல்லது பிற இதயக் கோளாறுகள் காரணமாக இதயம் துடிப்பது அல்லது இயங்குவது நின்றுவிட்டால் அடுத்து சில நிமிடங்களில் மரணம் தான் என்றிருந்தது அந்தக் கால சூழல். ஆனால் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவரும் இந்த நவீன காலத்தில், மாரடைப்பு போன்ற இதயக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஒருவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிட்டால் நவீன சிகிச்சைகள் மூலம் காப்பாற்றிவிடலாம். குறிப்பாக இதயம் பழுதானால் மாற்று இதயம் பொருத்துவதன் மூலம் ஒருவரது உயிரைக்காப்பாற்ற முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மாற்று இதயத்துக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை (ஒரு வருடத்துக்கு) ஆயிரங்களில் என்றால் சிகிச்சைக்கு கிடைக்கும் மாற்று இதயங்களின் எண்ணிக்கையோ நூறைத்தாண்டுவதே சாத்தியமில்லை என்ற நிலைதான் இன்றுவரை உள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு புகழ்பெற்ற இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும்கூட இதேநிலைதான். உதாரணமாக, அமெரிக்காவில் வருடத்துக்கு சுமார் 2400 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் தயார் நிலையில் இருந்தாலும் கிடைப்பதென்னவோ வெறும் 180 இதயங்கள் தான்.

தற்போது, இதயத்தை தானம் செய்பவருடைய இதயம் உடலுக்குள் இருக்கும்போதே அதனை மெல்ல மெல்ல குளிர்வித்து, பின்னர் அதன் துடிப்பை நிறுத்தி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின்னர் வேறொருவருக்கு பொருத்தப்படுகிறது. மாற்று இதயத்தை 4 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு குளிர்விப்பதன் மூலம் அதன் செயல்பாட்டினை சுமார் 90 விழுக்காடு வரை நிறுத்திவைக்க முடியும். அதேசமயம் அந்த இதயத்தில் உள்ள பிராண வாயு தீர்ந்துபோகும் முன்னர் மாற்று இதயத்துக்காக காத்திருப்பவரின் உடலுக்குள் பொருத்திவிட வேண்டும். இதுதான் இதுவரையிலான இதய மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பமாக இருந்துவருகிறது.

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி, ஒருவரின் உடலுக்குள்ளேயே செயலிழந்துபோன அல்லது இறந்துபோன ஒரு இதயத்தைக்கூட மீண்டும் உயிர்ப்பிக்கும் அட்டகாசமான திறனுள்ள ஒரு அதி நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் நகரிலுள்ள ‘ட்ரான்ஸ்மெடிக்ஸ்’ எனும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த அதிசய கருவி மாற்று இதயங்களை வெதுவெதுப்பான சூட்டில் வைத்து தொடர்ந்து இயங்கும் நிலையில் பாதுகாக்கிறது. இது தற்போதைய குளிர்விக்கும் முறைக்கு நேர்மாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தொழில்நுட்பத்தில், மாற்று இதயம் ஒரு கிருமிகளற்ற பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதனுள் இதயத்துக்கு பிராண வாயு, ரத்தம் மற்றும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் குழாய்கள் வழியாக தொடர்ந்து செலுத்தப்படுகிறது. இதன்மூலம் உடலுக்குள் வெளியே ஒரு மாற்று இதயமானது நீண்ட நேரம் செயல்படும் நிலையில் இருக்க முடியும் என்கிறார்கள் இதனை உருவாக்கிய ஆய்வாளர்கள்.

இந்த அதிசய தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் ஒரு மாற்று இதயத்தின் விலை என்ன தெரியுமா? சுமார் இரண்டரை லட்சம் டாலர்கள்!

About The Author

Related posts