Thursday, January 18, 2018

.
Breaking News

வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வடமாகாண அமைச்சர் ஆனந்தி சசிதரனிற்கு “எழுந்து மரியாதை செய்யாத”, 58 வயதான காவலாளி ஒருவரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்னமும் நிலப்பிரபுத்துவ காலத்தில் வாழ்கிறார்களோ என்ற ஐயத்தை உண்டாக்குகிறது. மக்களின் பிரதிநிதிகள் எனப்படுவோர் மக்களின் சேவகர்கள் என்பதை மறக்கக் கூடாது. இங்கே மரியாதை செலுத்த வேண்டியவர் ஆனந்தி சசிதரனே அன்றி, காவலாளி அல்ல.

ஆனந்தி சசிதரன் மட்டுமல்லாது அனைத்து பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களும் மக்கள் சேவகர்களே. உண்மையில் அவர்கள் தான் உழைக்கும் வர்க்கப் பிரதிநிதியான இந்தக் காவலாளிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் மக்களில் ஒருவராகக் காட்டிக் கொள்வதும், பதவி கிடைத்த பின்னர் ஓட்டுப் போட்டவர்களை அவமதிப்பதும் “மக்கள் பிரதிநிதிகளுக்கு” அழகல்ல.

காவலாளி தன்னை “நீ” என்று ஒருமையில் அழைத்ததாக ஆனந்தி சசிதரன் காரணம் தெரிவித்துள்ளார். வயதில் மூத்தவர்கள், இங்கே 58 வயதான காவலாளி, தனக்கு வயதில் குறைந்தவர்களை நீ என்று அழைப்பது தமிழ்ச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட விடயம் தான். மேற்கத்திய நாடுகளில் எந்தப் பதவியில் இருப்பவர் ஆயினும், நீ என்று அழைப்பது சர்வசாதாரணமான விடயம். ஆனந்தி சசிதரன் கூறிய காரணம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

மக்கள் தமது பிரதிநிதிகளை, அதாவது தமது சேவகர்களை மக்களே தேர்தலில் ஓட்டுப் போட்டு தெரிவு செய்கிறார்கள். அந்தப் “பிரதிநிதிகள்” தவறிழைக்கும் பொழுது திருப்பி அழைக்கும் அதிகாரமும் வழங்கப் பட வேண்டும். அதுவே உண்மையான ஜனநாயகம். மக்களுக்காக சேவை செய்வதே அவர்களது கடமை. ஒரு சாதாரண தொழிலாளியின் வேலையைப் பறிப்பதற்கு, அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

“எழுந்து நின்று மரியாதை செய்யாத” காரணத்தை வைத்து ஒரு காவலாளியை பணி நீக்கம் செய்யும் துணிவு மாகாணசபைக்கு எப்படி வந்தது? அரச ஊழியர்களின் தொழிற்சங்கம் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து போராட முன்வர வேண்டும். சம்பந்தப் பட்ட காவலாளியை திரும்பவும் வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கோர வேண்டுகிறேன்.

Kalai Marx

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *