Sunday, January 21, 2018

.
Breaking News

குரங்கு எடுத்த சுயபடம் ( Selfie )

குரங்கு எடுத்த சுயபடம் ( Selfie )

வனவிலங்குகளைப் படமெடுக்கும் புகைப்படக்காரர் ஒருவர் இந்தோனேசியாவின் காட்டுப்பகுதியொன்றில் குரங்குகள் பற்றிய படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு அவரது புகைப்படக் காமராவைக் கைப்பற்றி கிளிக் செய்தபோது அந்தக் குரங்கின் சுயபடம் (Selfie) பதிவாகிவிட்டது. அந்தப் படத்தைச் சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்டபோது அதற்காகத் தனக்குப் பதிப்புரிமைப் பணம் (Royalty) செலுத்தும்படி அந்தப் புகைப்படக்காரர் கோரிக்கை விடுத்தார். இந்தவிடயம் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு வந்தபோது, படத்தை எடுத்தது குரங்கு என்பதால் பதிப்புரிமைப் பணத்தை பெற்றுக்கொள்ளும் உரிமை அந்தக் குரங்கிற்கே உரியது என்றும், புகைப்படக்கருவியின் சொந்தக்காரர் என்பதற்காக அந்தப் புகைப்படக்காரருக்கு உரித்தாகாது என்றும் தீர்ப்பளித்தது. மேலும், குரங்கு ஒரு “சட்ட நபர்” அல்ல என்பதால் அதற்குச் சொத்துரிமை இல்லை என்ற காரணத்தால் அந்தப் படம் பதிப்புரிமையற்றதாகிறது. எனவே யாரும் பிரசுரிக்கலாம் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.. 

Paadum Meen Srikantharajah

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *