Sunday, January 21, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்…7…..நாவல்…. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்…7…..நாவல்….   சங்கர சுப்பிரமணியன்.
அறுவைசிகிச்சை நிபுணர் சொல்லிவிட்டு  சென்ற பதிலால் மிகவும் மனமுடைந்தபோன உலகநாதன் அங்கிருந்த
நண்பர்கள் உறவினர்களுக்கு விபரத்தைச் சொல்லிவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த மனைவியின் முகத்தைப்
பார்த்தார். அவளின் கண்களில் திரண்டு  நின்ற கண்ணீர கண்டு எங்கே தன் அழுது அவளையும் அழவைத்து
விடுவோமோ என்று சற்று திரும்பி தனது கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரைத் துடைத்தார். ஆனால் தன்னையும்
அறியாமல் அழ அதைப்பார்த்து அவரது மனைவியும் அழ இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவ மனையில்
நிலவிவந்த அதே துயரநிலை ஏற்பட்டது. அந்த இறுக்குமான சூழ்நிலை நீங்கும்படி அங்கே ஒன்று நடந்தது. அப்போது
அங்கே வேகமாக ஓடி வந்த தாதிப்பெண் உலகநாதனை நெருங்கி.
“சார், உங்களை பெரிய டாக்டர் அவசரமாக அழைத்து வரச்சொன்னார்,” என்றுகூறி அழைத்தாள்.
“அப்படியா? என்னவா இருக்கும் தெரியலையே” என்று சொன்னபடியே தாதிப்பெண்ணை பின் தொடர்ந்து
பெரிய டாகடர் அறையை உலகநாதன் அடைந்ததும் அவரை வரவேற்ற பெரியடாக்டர் அங்கே இருந்த ஒரு இருக்கையை
காட்டி அதில் அமரும்படி சொன்னார். அவருடன் இன்னும் இரண்டு டாக்டர்களும் இருந்தனர். அப்போது பெரியடாக்டர்
மற்ற டாக்டர்களைப் பார்த்தபடியே உலகநாதனையும் பார்த்துவிட்டு சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பின் மெதுவாக்
பேச ஆரம்பித்தவர் உலகநாதனைப் பார்த்து,
“மிஸ்டர் உலகநாதன், நான் இதற்குமுன் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இருவர் உயிருக்கும் எந்த
பயமும் இல்லை. ஆனால்…” என்று சிறிது தயங்கினார்.
“ஆனால் என்றால் என்ன டாக்டர்?”
“சொல்கிறேன். சொல்லித்தானே ஆகவேண்டும். உங்களுக்கே தெரியும். நடந்தது சிறியவிபத்து அல்ல. விபத்துக்கு
உட்பட்ட கார் மோசமாக சிதைந்து போனதையும் டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து போனதையும் நன்றாகவே
நீங்கள் அறிவீர்கள். இந்த விபத்தில் சிக்கிய உங்கள் மகள், மருமகன், மற்றும் பேரக்குழந்தை எல்லோரும் தப்பியதே
பெரிய விசயம். அதிலும் உங்கள் மருமகன் காரிலிருந்து வெளியே தூக்கி ஏறியப்பட்டிருக்கிறார். அதனால்தான் இவ்வளவு
சிக்கல். அவரை காப்பாற்றுவதே பெரியபடாகி விட்டது.”
” அதுதான் அவரைக் காப்பாற்றி விட்டீர்களே”
“அவர் உயிரை மட்டும் தான் காப்பாற்றி இருக்கிறோம்”
“அப்படியென்றால்?”
“மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள். அவரது உயிரை காப்பாற்ற முடிந்த எங்களால் எவ்வளவோ முயன்றும்
அவரது கால்களில் ஒன்றை எடுக்காமல் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை”
“என்ன சொல்றீங்க டாக்டர்? ஒருகாலை எடுத்துவிட்டீர்களா?” என்று குரல் உடைந்து  அழத்தொடங்கினார்.
அதன்பின் டாக்டர் சொன்ன எல்லாமே ஏதோ கிணற்றிலிருந்து வருவதுபோல் அவர்காதில் விழுந்து கொண்டிருந்தது’
அவரது மருமகனின் வலதுகால் தூக்கி எறியப்பட்டதால் மிகவும் சிதைந்து போய்விட்டது. ஆதலால் மருமகனின்
வலதுகாலை முட்டுக்குக்கீழ் எடுக்கவேண்டி வந்தது. அப்படி எடுக்காவிட்டால் அவரைக் காப்பாற்றி இருக்கவே
முடியாது என்று டாக்டர் சொன்னார். அதைத்தொடர்ந்து மேலும் டாக்டர் சொன்னார். காலை எடுத்து அவரது உயிரைக்
காப்பாற்றிய போதிலும் அவர் நிரந்தரமாக கோமாநிலைக்கு போய்விடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது.
அதற்கு காரணம் அவர்தலை பலமாக தரையில் மோதியதால் மூளையில் இரத்தம்கசிந்து இரத்தக்கட்டு ஏற்பட்டுவிட்டது.
அதையும் நாங்கள் வெற்றிகரமாக சரி செய்துவிட்டொம். ஆனால் அவர் தன்னைமறந்து ஏதேதோ பேசுகிறார்.
இப்படி பெரியடாக்டர் எல்லாவற்றையும் சொல்லிமுடித்ததும் உலகநாதன் தன் இருகைகளாய் தனது தலையில்
அடித்தபடியே என்னென்னவோ சொல்றீங்களே டாக்டர். அவர் ஒருகாலை எடுத்ததையோ என்னால் தாங்கிக் கொள்ள
முடியலையே டாக்டர். இப்போது அவருக்கு சுயநினைவில்லாமல் ஏதேதோ பேசுவதாக வேறு சொல்றீங்களே
டாக்டர். நான் என்ன செய்யப்போகின்றேன்? இதை நான் என்மகளிடம் எப்படி சொல்வேன்? இதை அவள் எப்படி தாங்கப்
போகிறாளோ தெரியலையே. அவள் வாழ்க்கை அவ்வளவுதானா? அது முடிஞ்சு போச்சா என்று சொல்லியபடியே
டாக்டரின் அறையைவிட்டு வெளியேவந்த அவரைச்சுற்றி உறவினர்களும் நண்பர்களும் சூழ்ந்துகொண்டு அவருக்கு
எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.
அவரை அணைத்தபடியே வெளியே அழைத்துவந்த உறவினரில் ஒருவர் வெளியில் கிடந்த இருக்கையில் அவரை
அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து அவரது ஒருகையை ஆதரவாகப் பற்றினார். மறுகையால் அவரது முதுகை
மெதுவாகத் தடவிக் கொடுத்தபடி அவரை அமைதிப்படுத்தலானார்.
-சங்கர சுப்பிரணியன்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *