Sunday, January 21, 2018

.
Breaking News

தேர்தல் கூட்டணிகள் எதைச் சாதிக்ப்போகின்றன?…. கருணாகரன்.

தேர்தல்  கூட்டணிகள் எதைச் சாதிக்ப்போகின்றன?…. கருணாகரன்.

“தமிழர்களின்    அரசியல் வந்து நிற்கிற இடம் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் நண்பர்  ஒருவர். வாடிச் சோர்ந்திருந்தார். ஒரு வாரத்துக்கு முன், வலு உற்சாகமாக ஒரு  நாளுக்கு ஐந்தாறு தடவைக்கு மேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமகால அரசியற்  சூழலைப் பற்றியும் மாற்று அணியொன்றைப் பற்றியும் புதுப்புதுச் செய்திகளையும் புதிய  புதிய ஐடியாக்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இப்பொழுது இப்படி வாடிச்சோர்ந்து போயிருக்கிறார் என்றால்….?

இது    டெங்குக் காய்ச்சல் அமளியாக நடக்கிற காலமென்பதால், “உடம்புக்கு ஏதும் ஆச்சுதா?”   என்று கேட்டேன். “அதை  விடப் பெரிய காய்ச்சல் ஊருக்கே  வந்திருக்கய்யா” என்றார் பதட்டத்தோடு.  புரியாமல்  விழித்த என்னைப் பார்த்து அவரே சொன்னார், “40 வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட சைக்கிள்சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் –   35   வருசத்துக்குமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச்சின்னமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் –   30     ருசத்துக்கு முந்திமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட உதயசூரியன்சின்னமும்தமிழர்விடுதலைக்கூட்டணியும் தான் மீண்டும் தமிழரின்தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்றனஎன்றால்…?”

வார்த்தையை  அவர் முடிக்கவில்லை. அதற்கிடையில் குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கி விட்டன.     சட்டென  எனக்குப் பொறி தட்டியது. எழுந்து உட்கார்ந்தேன். அவர் சொன்ன உண்மை பல கேள்விகளை
எழுப்பியது.

“அப்படியென்றால்?

தமிழர்கள்  அவ்வளவு தூரம்  பின்னடைந்திருக்கிறார்களா? மறுபடியும் நாற்பது ஐம்பது    ஆண்டுகளுக்குப் பின்  தள்ளப்பட்டிருக்கிறார்களா? ஏன், தமிழ் மக்களுக்கு வேறு   தெரிவுகளோ மாற்று வழியோ இல்லையா?……”

இப்பொழுது  உள்ளுராட்சி மன்றங்களின ் தேர்தலுக்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பதைப்பற்றிப்    பேசுகின்றன. இரவு பகலாகக் க ூடிக் கூடி ஆராய்கின்றன.

இதன்போது   வருகின்ற சேதிகளெல்லாம்  சைக்கிள், வீடு, உதயசூரியன் ஆகிய சின்னங்களை மீண்டும்    மக்களிடம் கொண்டு செல்வதற்கே இந்தத் தரப்புகள் முயற்சிக்கின்றன என்பது. இந்தச் சின்னங்களை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லலாம். ஆனால், அதற்கான குணாம்ச மாற்றம்,    முன்னேற்றம், புதிய நிலை போன்றவை இந்தச் சின்னங்களைப் பிரதிபலிக்கும் அரசியற்  தரப்பினரிடத்திலே உள்ளதா? என்றால், நிச்சயமாக இல்லை என்பதே பதில்.   தங்களை    எந்த வகையிலும் மாற்றிக் கொள்ள முற்படாமல், சுய விமர்சனம், சுய பரிசோதனை, சுய மதிப்பீடு செய்து கொள்ளாமல், அதே பழைய வழித்தடத்திலேயே பயணிக்க முற்படும் இந்தக்   கட்சிகளை எவ்வாறு அப்படியே அங்கீகரித்து ஏற்றுக் கொள்வது?

கடந்த   கால, சமகால, எதிர்கால அரசியல் செல்நெறியைப் பற்றிய புரிதல் இந்தக் கட்சிகளிடம்   எப்படி உள்ளன என்பதை நன்றாகவே அவதானித்துக் கொண்டிருக்கிறோம். மக்களிடம்   இவற்றுக்குள்ள அக்கறைகளையும் கவனித்திருக்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட   மக்களுக்குக் கடந்த காலத்தில் இவை எத்தகைய பங்களிப்புகளைச் செய்துள்ள என்பதையும்   அறிவோம். எதிலும் இவை நிறைவு கொள்ளக் கூடியன அல்ல. ஆகவே இவற்றின் ஆற்றல் நமக்குத்    தெளிவாகத் தெரியும்.

“குறைந்தபட்சம், தங்களுடைய கட்சியைக்கூட ஒழுங்காகக்கட்டமைக்க முடியாதஅளவில்தான் எல்லாக்கட்சிகளும் உள்ளன.ஒருகூட்டணியைக்கூட ஒழுங்காக அமைக்கமுடியாத அளவில்தான் இவற்றின்தலைவர்களிருக்கிறார்கள்.  இப்படியெல்லாம்    இருக்கும்போது  எப்படி நாம், இந்தக் கட்சிகளையும் இவற்றின் சின்னங்களையும் ஏற்பது?”   என்ற நண்பரின் கவலை நியாயமானதே!

இதை விட, இங்கே கவலையளிக்கும்படியாக  இருப்பது, இந்தக் கட்சிகளையும் அவற்றின்    சின்னத்தையும் கடந்து புதிய வடிவத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு இவற்றுக்கு வெளியே யாருக்கும்    துணிச்சலில்லாமல் இருப்பது  என்பது. புதியகூட்டுகளைப் பற்றியும் புதிய சின்னங்களைப் பற்றியும் சிந்திப்பதற்குப் யாரும்  தயாராக இல்லை. அப்படியென்றால், தன்னம்பிக்கை இழந்த சமூகமாகத் தமிழ்ச்சமூகம் மாறி  விட்டதா? என்றே எண்ணத்தோன்றுகிறது. உண்மையும் அதுதான். தன்னம்பிக்கையும் ஆற்றலும்  துணிச்சலும் செயற்றிறனும் உள்ளவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுப் போரில்  மாண்டு விட்டனர். எஞ்சியிருப்போர் அந்தக் களத்திலிருந்து வெளியேறியும் விலகியும்    விட்டனர். இதற்கு உளவியற் காரணங்களும் வாழ்க்கை நிலவரங்களும் பிற நியாயங்களும் உண்டு.   ஏனையவர்கள் தொடர்ந்தும் செயற்படுவதற்கு மேற்படி “பாரம்பரிய அரசியற் தரப்புகள்”  வழிமறிக்கின்றன. இடமளிக்கத் தவறுகின்றன. அவ்வாறு செயற்பட முன்வரும் ஆற்றலாளர்களை   அங்கீகரிக்காமல், அவர்களின் மீது சந்தேகப் போர்வை போர்த்தப்பட்டு, அவதூறு செய்து   நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ மக்களும்   இடமளிக்கிறார்கள். என்பதால்தான், இந்தப் பெரிய வீழ்ச்சி தமிழ்த்தரப்புக்கு   ஏற்பட்டுள்ளது.

இதனால்தான்,   இந்தக் காலப்பகுதியில் மாற்றுத் தலைமையொன்றின் உருவாக்கத்தைக் குறித்த சிந்தனையை   நான் உட்படச் சிலர் முன்வைத்தபோது, அதைத் தவறாக விளங்கிக் கொண்டு, தற்போதுள்ள   கட்சிகளுக்குள் ஆட்களைப் பிடுங்கி, இன்னொரு கூட்டை உருவாக்குவதே மாற்றுத் தலைமை    என்ற அளவிலேயே பலரும் புரிந்து கொண்டனர். அந்த வகையில்தான் புதிய கூட்டுகள்    அணுகவும் பட்டது. ஆனால், புதிய உணர்நிலையைக் கொள்ளாத வரையில், பழைய கள்ளு, பழைய     கள்ளு, புதிய லேபிள் என்பதாகவே இந்த மாற்று ஏற்பாடுகள் அமையும். ஆகவே    தன்னம்பிக்கை இல்லாத சமூகம், புதிய பாதைகளில் பயணிக்க முற்படாது. புதிய பயணங்களை    மேற்கொள்வதே வளர்ச்சியாகும். அதுவே மாற்றங்களை உண்டாக்கும். அதுவே   பிரச்சினைகளுக்கான தீர்வைத் தரும். உலக வரலாறும் மானுட வரலாறும் இதையே சொல்கின்றன.

ஆனால்,

இந்த மாபெரும் உண்மைக்கு மாறாகவும் வரலாற்றுச் சேதிக்கு மாறாகவும் தமிழர்கள்    மட்டும் சிந்திப்பது என்றால், அதன் விளைவுகள் பாதகமாகத்தானே இருக்கும்.   கடந்த     தேர்தல்களின் போதும் இந்தக் கட்சிகளும் இந்தச் சின்னங்கள் மீண்டும்   புழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இப்பொழுதும் அதற்கான ஏற்பாடுகளே நடக்கின்றன.    இந்த இடத்தில் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். பழைய காப்புக் கடைக்கு உங்கள் பிள்ளைகள்    மட்டுமல்ல, நீங்களே போக மாட்டீர்கள். உங்கள் அப்பாவைப்போலவோ, தாத்தாவைப்போலவோ    துணிப்பையை மடிக்குள் மணிபேர்ஸாகக் கட்டிக் கொண்டு வெளியே போவதற்கு உங்களில்    எத்தனைபேர் தயார்? இந்த நிலையில் இன்னும் அந்தப் பழைய தகரக் கிலுக்கட்டியைத்தான்    நீங்கள் கிலுக்கிக் கொண்டிருக்கப்போகிறர்களா?

ஒரு  கணம் சிந்தித்துப் பாருங்கள். கடந்த தேர்தலின்போது தெரிவு செய்யப்பட்ட வீட்டுச் சின்னமும் இப்பொழுது ஒன்றுக்குமே உதவாத சின்னமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது  அந்தச் சின்னத்துக்கு வரலாற்றில் கிடைத்திருக்கும் இரண்டாவது தோல்வியாகும். ஏற்கனவே   அந்தச் சின்னத்தை அந்தக் கட்சியினரே கைவிட்டிருந்தனர்.  (தமிழரசுக் கட்சியினரே வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டு,  உதயசூரியன் சின்னத்துக்கு – புதிய கூட்டணியொன்றுக்கு – தமிழர் விடுதலைக்  கூட்டணிக்கு மாறியிருந்தனர்)   கூட்டமைப்பும்    வீட்டுச் சின்னமும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.   இதற்குக் காரணம், அதற்குள்ளிருக்கும் வினைத்திறனின்மையும் புதிய சிந்திக்க    முடியாமையுமே. இதுவே அதனுடைய பின்னடைவுக்குக் காரணமாகியுள்ளது. மக்கள் எப்போதும்    முன்னகரக் கூடிய சக்திகளையே விரும்புவர். அவர்களுக்கு அதுவே தேவை. கடந்த தடவை   பல்வேறு காரணங்களின் நிமித்தமாக கூட்டமைப்புக்கும் வீட்டுச் சின்னத்துக்கும் ஒரு   வாய்ப்பைக் கொடுத்திருந்தனர். அந்த வாய்ப்பைக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக்   கொள்ளவில்லை. கூட்டமைப்பின் பொறுப்பிலிருந்த உள்ளுராட்சி மன்றங்கள் ஊழல்   குற்றச்சாட்டுக்கும் நிர்வாகச் சீர் கேட்டிற்கும் உள்ளாகின. வட மாகாணசபை    வினைத்திறனின்மையாலும் உள் முரண்பாடுகளாலும் அழிந்து நிற்கிறது. பாராளுமன்ற   உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்களுக்கும் மக்களுடைய  பிரச்சினைகளுக்குமிடையில் வெகு தொலைவு என்றாயிற்று.

இந்தத்  தவறுகளையும் பலவீனங்களையும் மக்கள் எப்பொழுதும் அங்கீகரிப்பார்கள் என்றில்லை.   கடந்த தேர்தலில் கூட கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை விட, வீட்டுச் சின்னத்தின்   மீதான பிடிப்பை விட, வேறு தெரிவுகளில்லை என்ற நிலையில்தான் மக்கள் கூட்டமைப்புக்கும்    வீட்டுச் சின்னத்துக்கும் வாக்களித்திருந்தனர். அதோடு, அன்றைய மகிந்த ராஜபக்ஸ   அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வும் கூட்டமைப்புக்கு – வீட்டுச் சின்னத்துக்கு   ஆதரவைத் திரட்டியது. இதெல்லாம் சம்மந்தன் தரப்பினருக்கு நன்றாகவே தெரியும்.  இப்பொழுது    அந்த நிலைமை இல்லை. ஆகவே இன்றைய நிலையும் அதன்    போக்கும் வேறாக உள்ளன. இன்றைய தேவைகளும் மாறி விட்டன. இன்றைய உலக ஒழுங்கில்   பல்வேறு தேவைகள் முன்னுக்கு வந்துள்ளன. அவற்றையெல்லாம் புரிந்து கொண்டு,    அவற்றுக்கு ஏற்ப அரசியற் தலைமையை வழங்கக் கூடிய தரப்புகளே இன்று தேவை. அதற்கான   கட்சிகளே வேணும். அதற்கான சின்னங்களே அவசியம்.  ஆனால்,   துரதிருஷ்டமாக பலருடைய கவனமும் ஏதாவதுஒருகட்சியை அல்லது கூட்டணியைச் சார்ந்திருப்பதிலேயே உள்ளது. கட்சியோ கூட்டணியோ இல்லையென்றால ்உயிர்வாழவேமுடியாது  என்ற மாதிரிதூக்கமே இல்லாமலிருக்கிறார்கள். இதற்கு நான் முன்னரே   குறிப்பிட்டுள்ளதைப்போலத்  தன்னம்பிக்கை  இல்லாத நிலையே  காரணமாகும்.

இந்த  இடத்தில் ஒரேயொரு கேள்வியை மட்டும் எழுப்பலாம். இந்தக்கட்சிகளும் கூட்டணிகளும் இதுவரையான வரலாற்றில் தமிழ்மக்களுக்குச் செய்த பங்களிப்பும்   சாதனைகளும ் தியாகமும்என்ன? மக்களை  விட எந்தளவுக்கு  இவற்றின்  தியாகமும்  இந்தத்  தலைவர்களின்  அர்ப்பணிப்பும்  கூடுதலாக    உள்ளது?   இதைப்பற்றித்   தெரிந்தவர்கள் தங்களுடைய கருத்துகளை இங்கே முன்வைக்கலாம். சுய மதிப்பீட்டைச்   செய்யாத  மக்களும்  துணிவு  கொள்ளாத  சமூகமும்  முன்னேற்றங்களைக்  காணவே  முடியாது.    வரலாற்றில் முன்னோக்கிப் பயணிக்க முடியுமே தவிர,  பின்னோக்கிப் படியிறங்க முடியாது.  அப்படி நிகழ்ந்தால், அது அழிவுக்கே வழியாகும்.   ஆகவேதான்சொல்கிறேன், தமிழ்ச்சமூகம ்தன்னுடைய அரசியல்பாதையில் வெற்றிகரமாகப் பயணிப்பதற்கு இன்னும்  பலநூற்றாண்டுகள் தேவைஎன.    ஏனெனில்,  இந்தப் பழைய கட்சிகளின் கடந்த காலத்துக்கும் இன்றைய சூழலுக்கும் இடையில் நடந்ததுஎன்ன?  அதற்கானவிலைஎன்ன?    அவற்றுக்கானமதிப்புஎன்ன?    இதைப்பற்றி     உங்கள் மனதில் உள்ள கணிப்பு என்ன? என ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொள்ளுங்கள்.   அந்த    நண்பர் இந்தச் சமூகத்துக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் நல்லிதயத்தைக் கொண்டவர்.   “நல்லார் ஒருவர் பொருட்டுப் பெய்யுமாம் பெருமழை” என்பது பொது அறம். அரசியலில் இது   “நல்லாரும் வல்லாரும் சேரும்போதே பெய்யுமாம் பெருமழை” என்பதாகும்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *