Wednesday, December 13, 2017

.
Breaking News

ஹாலிவுட் படத்தில் கெத்துகாட்டும் நெப்போலியன்!

பாரதிராஜாவின் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக உயர்ந்த அந்த ‘உயர்ந்த மனிதர்’ நெப்போலியன், சினிவைப் போலவே  அரசியல் களத்திலும் புகுந்து விளையாடியவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஒரு கலக்கு கலக்கிய நடிகர் நெப்போலியன் தற்போது ஹாலிவுட் பட உலகத்தையும் ஒரு கை பார்த்துவிடும் முடிவோடு ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

அவர், ‘டெவில்ஸ் நைட்’ என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கும் ஹாரர் கதையைக் கொண்ட இந்தப்படத்தில் நெப்போலியன், அருங்காட்சியக பொறுப்பாளராக  நடித்திருக்கிறார். இதில் ஜெஸ்ஸி டீன், ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த ஹாலிவுட் படத்தை திருச்சியை சேர்ந்த தமிழரான டெல் கணேசன், கைபா பிலிம்ஸ் பட நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார்.

இந்த ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. அதில், நெப்போலியன் அசத்தலான கெட்டப்பில் இருக்கிறார். தொடை தெரிய ஏதிக்கட்டிய வேட்டியோடு, அருவா மீசையும், கொடுவாப் பார்வையுமாகப் பார்த்துப் பழக்கப்பட்ட  நெப்போலியன், இதில் கோட்டு சூட்டு போட்டு செம கெத்தாக இருக்கிறார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *