Wednesday, December 13, 2017

.
Breaking News

ஜெ. இட்லி சாப்பிடவில்லை, நீராகாரம் தான் சாப்பிட்டார்: மருத்துவர் பாலாஜி

ஜெ. இட்லி சாப்பிடவில்லை, நீராகாரம் தான் சாப்பிட்டார்: மருத்துவர் பாலாஜி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, இட்லி சாப்பிடவில்லை, அவர் திரவ உணவுகளை தான் எடுத்துக்கொண்டார் என மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். அவர் விசாரணை ஆணையத்தில் தெரிவித்த தகவலின்படி, “ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. லண்டன் மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும் தான் சிகிச்சை அளித்தனர். பெங்களூரு, ஐதராபாத்திலிருந்தும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வந்தனர்

லண்டனில் சிகிச்சை பெற வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்க மறுத்தார்.  ஜெயலலிதாவின் கைரேகை பெறும் போது நான் அவரை சந்தித்தேன். தொடக்கத்தில் அவர் இட்லி எல்லாம் சாப்பிடவில்லை, பல நாட்கள் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவுடன் இறுதிவரை சசிகலா மட்டுமே இருந்தார்.

ஆணையத் தலைவர் ஆறுமுகசாமியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன், சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிச.27ம் தேதி மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *