Wednesday, December 13, 2017

.
Breaking News

ராணுவத்தில் அதிகரிக்கும் அரசியல்: தளபதி பிபின் ராவத்

ராணுவத்தில் அதிகரிக்கும் அரசியல்: தளபதி பிபின் ராவத்

சமீப காலமாக ராணுவத்தில் அரசியல் அதிகரித்து வருவதாக  இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் வருத்தம் தெரிவித்துள்ளார். ராணுவத்தில் பெண்களை பற்றியும் சமீப காலமாக அதிகமாக பேச்சுக்கள் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

“ராணுவத்தில் என்றுமே அரசியல் இருக்கக் கூடாது. ஆனால்,  சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக இங்கு அரசியல் புகுவதை பார்த்து வருகிறோம். இது தவிர்க்கப் படவேண்டிய ஒரு விஷயமாகும். ஒரு தனிப்பட்ட சுதந்திரமான இடத்தை ராணுவத்தில் உருவாக்கி வைத்துள்ளோம். நம் ஜனநாயகத்தில், ராணுவத்தில் என்றுமே அரசியல் வரக் கூடாது.

இதற்கு முன் பெண்களை பற்றியும் அரசியல் பற்றியும் என்றுமே பேச்சுக்கள் எழாமல் இருந்தன. ஆனால், சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக அது அதிகரித்து வருகிறது” என்றார்.

அரசியல் இல்லாத சூழ்நிலையில், பாதுகாப்புப் படைகள் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள், என்றும் தளபதி ராவத் கூறினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *