Wednesday, December 13, 2017

.
Breaking News

விரைவில் வெளியாகும் 40 எம்பி, 3 லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்?

விரைவில் வெளியாகும் 40 எம்பி, 3 லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்?

40 எம்பி, 3 லென்ஸ் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருப்பதாக பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் சந்தையில் தற்சமயம் வெளியாகும் சாதனங்களின் கேமரா அம்சம் முன்பை விட அதிகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் ஐபோன்களுக்கு சவால் விடும் வகையிலும், அவற்றை மிஞ்சும் வகையிலும் சாம்சங், கூகுள் மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் தலைசிறந்த கேமராக்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ஹூவாய் நிறுவனம் ‘PCE’ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும், இவை அழகிய புகைப்படங்களை எடுக்க ஏதுவான கேமரா லென்ஸ் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். புதிய ‘PCE’ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 40 எம்பி, டிரிப்பிள் லென்ஸ் (5X-ஹைப்ரிட் சூம்) கேமரா மாட்யூல் மற்றும் 24 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *