Wednesday, December 13, 2017

.
Breaking News

அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்ட அதிபர்கள்; ஆசிரிய சங்கம் கண்டனம்

அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்ட அதிபர்கள்; ஆசிரிய சங்கம் கண்டனம்

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க பாடசாலை அதிபர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த அறிக்கை நேற்று முன்தினம் (4) வெளியானது. இதையடுத்து, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, ஆசிரியர்கள் சிலர் நேற்று (5) அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பணி நிமித்தம் அவர்களை  ஒன்றுகூட்ட வேண்டுமாயின் கல்வி அமைச்சிலோ அல்லது உயர் பாடசாலை ஒன்றிலோ மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், மாறாக அவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமையானது தேர்தல் ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்த விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *