Wednesday, December 13, 2017

.
Breaking News

அமர்நாத்தில் தாக்குதல் நடத்தியவர்கள்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதி பலி

அமர்நாத்தில் தாக்குதல் நடத்தியவர்கள்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதி பலி

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதிகள் 3 பேர் நேற்று என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை மதியம் ராணுவ வாகனங்கள் ஜம்மு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது குவாசிகுண்ட் என்ற இடத்தில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மற்றொரு வீரர் காயமடைந்தார். உடனடியாக ராணுவத்தினர் அந்த பகுதியை ‘சீல்’ வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த சண்டை நேற்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த யாவர் பசீர், அபு பர்ஹான், அபு மவியா ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி பட்டிங்கோ என்ற இடத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவில் இருந்த தீவிரவாதிகள். இந்த தாக்குதலில் 8 பக்தர்கள் பலியாயினர். 19 பக்தர்கள் காயமடைந்தனர். நேற்றைய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்களில் யாவர் பசீர் உள்ளூர் தீவிரவாதி. மற்ற இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

துப்பாக்கிச் சண்டையின்போது ரஷீத் அகமத் என்ற உள்ளூர் தீவிரவாதி தப்பிச் சென்றார். தேடுதல் வேட்டையில் அனந்தநாக் பகுதியில் பிரசவ மருத்துவமனை ஒன்றில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *