Wednesday, December 13, 2017

.
Breaking News

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: லண்டன் மேயர்

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: லண்டன் மேயர்

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்த லண்டன் மேயர் சாதிக் கான், 1919-ம் ஆண்டு அமிர்தசரசின் ஜாலியன்வாலாபாக்கில் பிரிட்டிஷார் செய்த படுகொலைகளுக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாயன்று அமிர்தசரஸ் வந்த லண்டன் மேயர் சாதிக் காண், ஜாலியன்வாலாபாக்கில் படுகொலையானவர்களுக்கு தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

“ஜாலியன்வாலாபாக்கிற்கு வருகை தருவது மிகவும் உணர்ச்சிகரமானது. நம் எண்ணங்கள் இறந்தவர்களுக்காக வருந்துகிறது.

பிரிட்டன் அரசு இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 1919-ம் ஆண்டு வைசாகி நாளின் போது நடந்த இந்தத் துயரச் சம்பவத்தை நாம் ஒருநாளும் மறக்க முடியாது” என்று சாதிக் கான் வருகையாளர்கள் பதிவேட்டில் எழுதி வைத்தார்.

இவர் மட்டுமல்ல, 2013-ம் ஆண்டு இங்கு வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன்வாலாபாக் படுகொலையை “வெட்கங்கெட்ட செயல்” என்று வர்ணித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லண்டன் மேயர் பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார், அவர் தங்கக்கோயிலுக்கும் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *