Wednesday, December 13, 2017

.
Breaking News

கர்நாடக மாநிலத்தில் நடிகை ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் திறப்பு!

கர்நாடக மாநிலத்தில் நடிகை ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் திறப்பு!

நடிகை ரம்யா பெயரில் கர்நாடக மாநிலம் மண்டியாவில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா மலிவு விலை உணவகத்துக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே பாணியில் கர்நாடகாவில் முதல் -மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு “இந்திரா கேண்டீன்’’ (இந்திரா மலிவு விலை உணவகம் ) தொடங்கியது. இந்த உணவகத்தை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராகுல்காந்தி திறந்து வைத்தார்.

தற்போது பெங்களூருவில் 198 மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாக “அப்பாஜி கேண்டீன்’’ (அப்பாஜி மலிவு விலை உணவகம்) திறக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடிகையும், அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. ரம்யா ரசிகர் மன்ற தலைவர் ரகு தொடங்கி உள்ள இந்த உணவகம் மண்டியா – மைசூரு பிரதான சாலையில் அமைந்து உள்ளது. ரம்யாவுக்கும் இந்த உணவகத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இந்த மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் மண்டியா தொகுதியில் களமிறங்க ரம்யா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

‘குமாரி ரம்யா கேண்டீனில்’ ( மலிவு விலை உணவகத்தில்) காலை சிற்றுண்டி ரூ. 5-க்கும், மதிய உணவு ரூ.10-க்கும் விநியோகிக்கப்படுகிறது. மலிவு விலையில் மசால் தோசை, ராகி களி, மத்தூர் வடை, இட்லி, பொங்கல் உள்ளிட்ட சுவையான உணவு வகைகள் பரிமாறப்படுவதால், ரம்யா உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *