Wednesday, December 13, 2017

.
Breaking News

யார் பின்னால் நின்று எதிர்க்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை: விஷால் பேட்டி

யார் பின்னால் நின்று எதிர்க்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை:   விஷால் பேட்டி

நேர்மை நீதி நியாயம் ஜெயித்தது, என்னுடைய நாமினேஷன் ஏற்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், யார் பின்னால் நின்று எதிர்க்கிறார்கள் என்று கவலைப்பட போவதில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஷால் இன்று அளித்த பேட்டி:

“நேர்மை நீதி நியாயம் ஜெயித்தது, என்னுடைய நாமினேஷன் ஏற்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நியாயமாக எதை செய்ய வேண்டுமோ அதை தேர்தல் கமிஷன் செய்தது. அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வேறு ஒருவர் கையெழுத்து என்று புகார் வந்தது. அதற்கான விசாரணை நடந்து உண்மை வெளியானது. ஒரு விஷயத்தை சொல்கிறேன் ஆடியோ ஒன்று வெளிவந்தது, அந்த ஆடியோ உண்மைதான். யார் எதிர்க்கிறார்கள், யார் ஓரங்கட்டப்பார்க்கிறார்கள், யார் பின்னால் இருக்கிறார்கள் என்று அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை.

தேர்தலை நேர்மையாக சந்திக்க உள்ளேன். நிச்சயம் வெற்றி பெருவேன். எனக்காக முகம் தெரியாமல் போராடிய சுயேச்சை வேட்பாளர் கலை என்பவருக்கும், முகம் தெரியாமல் எனக்காக பரிந்து பேசி, விஷால் சரியான நபர்தான் என்று எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.”

இவ்வாறு விஷால் பேட்டி அளித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *