Wednesday, December 13, 2017

.
Breaking News

மீனவர்களின் நலன்கருதி ஆயிரம் கோடி ரூபாவிற்கும் மேல் நிதி ஒதுக்கீடு

மீனவர்களின் நலன்கருதி ஆயிரம் கோடி ரூபாவிற்கும் மேல் நிதி ஒதுக்கீடு

மீனவர்களின் நலன்கருதி இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு தொடர்பிலான விவாதம் இடம்பெறுகின்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், கந்தர, வெலிமங்கட மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கென 20 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய படகுகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன கடற்றொழில் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *