Wednesday, December 13, 2017

.
Breaking News

கேரளாவில் அரசுப் படைகளுடன் மீட்புப் பணியில் இணைந்த மீனவர்கள்

கேரளாவில் அரசுப் படைகளுடன் மீட்புப் பணியில் இணைந்த மீனவர்கள்

நடுக்கடலில் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக் கோரி தமிழகம் மற்றும் கேரளத்தில் போராட்டங்கள் தொடர்ந்துவரும் நிலையில், கேரளாவில் அரசுப் படைகளுடன் மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒக்கி புயலால் கடலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால், கேரள மற்றும் தமிழக மீனவர் கிராமங்களில் பதற்ற நிலை நிலவுகிறது.

இதுவரை 690 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மீட்புப் பணியில் தாமதம் செய்வதாகக் கூறி, மீனவர் குடும்பங்கள் சாலை மறியலிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த 150 மீனவர்கள், திங்கட்கிழமை அன்று கேரளத்தின் விழிஞ்ஞம் மற்றும் பூந்துறை பகுதிகளில் இருந்து 50 படகுகளில் சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அரசு கப்பற்படை, விமானப் படை மற்றும் கடலோரக் காவல்படையின் மீட்புப்பணிகளில் கேரள மீனவர்களையும் இணைத்துள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *