Wednesday, December 13, 2017

.
Breaking News

கண்ணுக்குள் பச்சை குத்திய மாடல் அழகி: பார்வை பறிபோகும் அபாயம்!

கண்ணுக்குள் பச்சை குத்திய மாடல் அழகி: பார்வை பறிபோகும் அபாயம்!

கனடாவை சேர்ந்த மாடல் அழகி கேட் கேளிங்கர் . இவர் தனது உடல் அமைப்பை மாற்றி அமைப்பதில் ஆர்வம் உடையவர். உடலின் பல உறுப்புகளில் மாற்றம் செய்து போட்டோவை ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது கண்ணில் விழி வெண்படலத்தின் நிறத்தை மாற்றி புதுமை படைக்க விரும்பினார். அதற்காக கண் டாக்டரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கண்ணுக்குள் விரும்பிய நிறத்தை பச்சை குத்தலாம் என பரிந்துரை செய்தார்.

அதை தொடர்ந்து அவர் கருஞ்சிவப்பு (‘பர்பிள்’) நிறத்தில் மையை தேர்வு செய்து பச்சை குத்துவது போன்று ஊசி மூலம் கண் விழி வெண் படலத்தில் செலுத்தினார். அதை தொடர்ந்து விழி வெண் படலம் கருஞ்சிவப்பு நிறத்தில் மாறியது.

ஆனால் கண்ணுக்குள்ளேயும், இமைப்பகுதியும் வீங்கியது. வேதனை அதிகரித்தது. அதையடுத்து அவர் டாக்டரிடம் சென்று பரிசோதித்தார். அவர் சில கண் மருந்துகளை சிபாரிசு செய்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *