Wednesday, December 13, 2017

.
Breaking News

போட்டிக்காகவும் பரீட்சைக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் கல்விகற்கும் எங்கள் சமூகத்தின் கல்வியை!

போட்டிக்காகவும் பரீட்சைக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் கல்விகற்கும் எங்கள் சமூகத்தின் கல்வியை!

போட்டிக்காகவும் பரீட்சைக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் கல்விகற்கும் எங்கள் சமூகத்தின் கல்வியை மீளக் கட்டியெழுப்ப இதுவொரு முன்ணுதாரணம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்ல தன்னுடைய மகனை பாடசாலைக்கு அனுப்பி வைத்த போது மகனின் ஆசிரயருக்கு எழுதிய கடிதத்தின் சாரம். (நன்றி Nadarajah Anantharaj)
‘உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டொலர் , உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டொலர்களை விட மதிப்பானது என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவனுக்குப் பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தையும் எதற்கெடுத்தா லும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதையும் புரியவை யுங்கள்.
புத்தகம் என்னும் அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
ஏமாற்றுவதைவிடத் தோல்வி அடைவது மேலென்று புரிய வையுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும் , முரடர் களிடம் கடினமாகவும் அணுகுவதற்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாகக் கரைந்துவிடாமல் எந்தச் சூழலி லும் தனது சொந்த நம்பிக்கை யின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர்விடுவதில் தவறு இல்லை என்றும் கற்றுக்கொடுங்கள்.
அவன் தன் மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் நம்பிக்கை கொள்வான்.
இவற்றில் உங்களுக்கு எவை எல்லாம் சாத்தியமோ அவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்!’…. 

Alex Alwinies
Image may contain: 1 person

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *