Thursday, January 18, 2018

.
Breaking News

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்

அடுத்த ஆண்டு அக்டோபர் 18–ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று விசுவ இந்து பரி‌ஷத் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில், விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் பிராந்திய பொறுப்பாளரும், ஆர்.எஸ்.எஸ். பிரசாரகருமான போலேந்திரா நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘‘அயோத்தியில் அடுத்த ஆண்டு 18–ந்தேதி பிரமாண்டமான அளவில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கி விடும். இதற்கான உறுதிமொழியை வட்டார அளவில் எடுத்துக்கொள்வதற்கான நிகழ்ச்சியை விசுவ இந்து பரி‌ஷத் வரும் 6–ந் தேதி நடத்தும். இதில் இந்து அமைப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொள்வர்’’ என்று கூறினார்.

‘‘அயோத்தியில் ராமர் கோவிலை மகந்த் நிருத்யா கோபால்தாஸ் தலைமையிலான ராம ஜென்ம பூமி நியாஸ் தான் கட்டும்’’ என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ராமர் கோவில் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 5–ந் தேதி தொடங்குகிறது. தினந்தோறும் விசாரணை நடைபெறுகிறபோது அக்டோபர் மாத வாக்கில் கோர்ட்டு தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். எனவே அக்டோபர் 18–ந் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணியை தொடங்கி விட முடிவு செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *