Thursday, January 18, 2018

.
Breaking News

இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு!

இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு!

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதியருக்கு 2 மகன்கள். அவர்களில் மூத்தவர் இளவரசர் வில்லியம். 2வது மகன் இளவரசர் ஹாரி ஆவார்.

இளவரசர் வில்லியமுக்கு கேத்தரீன் உடன் திருமணம் முடிந்து விட்டது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மற்றும் தனது தோழியான மேகன் மார்கிளை காதலித்து வருகிறார் என்றும் அவரை திருமணம் செய்ய உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கிள் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் இன்று அறிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *