Sunday, January 21, 2018

.
Breaking News

தீயை அணைக்கும் பெண்கள்!

தீயை அணைக்கும் பெண்கள்!

மும்பையில் முதன் முறையாக தீயணைப்பு துறையில் ஒரே நேரத்தில் 97 பெண்கள் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். தற்போது இவர்கள் அனைவரும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

தீயணைப்பு துறை சார்ந்த அனைத்து விதமான பயிற்சிகளையும் முடித்த பின்னர் அடுத்த மாதம் மாநிலத்தில் உள்ள 34 தீயணைப்பு நிலையங்களில் பணியை தொடர இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நாசிக் மாவட்டத்திலுள்ள சின்னார், சிந்துடுர்க், ஜல்கான் போன்ற கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள். தற்போது வாதாலாவில் உள்ள மண்டல அலுவலகத்தில் தீயை அணைக்கும் ஒத்திகையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டப் படிப்பை முடித்தவர்கள். போலீஸ், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களும் தீயணைப்பு வீராங்கனைகளாக மாறி இருக்கிறார்கள்.

22 வயதான கவிதா குரூலே பி.எஸ்சி. கணிதம் படித்திருக்கிறார். இவருக்கு ராணுவத்தில் சேரும் ஆசை இருந்திருக்கிறது. ‘‘ராணுவத்தில் சேருவதற்கு முயற்சி செய்தேன். அது முடியவில்லை. தீயணைப்பு படையில் பெண்கள் சேர்க்கப்படுவதாக கேள்விப்பட்டேன். நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய பணியில் ஆர்வமாக இருந்ததால் இதற்கு விண்ணப்பித்தேன்’’ என் கிறார். நாசிக்கை சேர்ந்த சுமீதா தாவரே எம்.காம். படித்தவர். ‘‘போலீசில் சேர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தீயணைப்பு துறையில் ஆட்சேர்ப்பு பற்றி கேள்விப்பட்டதும் விண்ணப்பித்தேன். வேலை கிடைத்துவிட்டது’’ என்கிறார். சிந்துடுர்க் பகுதியை சேர்ந்த பூஜா நாயக்கும் போலீசில் சேர ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்டு வந்திருக்கிறார். அவருடைய ஆசிரியர் ஒருவர் இதற்கும் விண்ணப்பிக்குமாறு கூறியதால், விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றுவிட்டார்.

முதன் முதலாக தீயணைப்பு துறையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் சேர்க்கப்படுவதை தலைமை தீயணைப்பு துறை அதிகாரி ரஹாங்டேலே உறுதிபடுத்தியுள்ளார். ‘‘இந்த பெண்கள் தீயணைப்பு துறை பயிற்சியின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்கள். பயிற்சியை முடித்ததும் பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள். எல்லோருமே ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடினமான பணிகளை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்’’ என்கிறார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *