Thursday, December 14, 2017

.
Breaking News

நிலைகுலைந்தேன் போகிறாரோ?… சங்கர சுப்பிரமணியன்.

நிலைகுலைந்தேன் போகிறாரோ?…  சங்கர சுப்பிரமணியன்.
மாஞ்சோலைக் குயில்கள் அங்கே கூவும்போது
மனமெல்லாம் மகிழ்வதாய் சொல்ல அறிந்தேன்
பூஞ்சோலை வண்டினங்களும் பறந்து அங்கே
புதுப்பாடலாய் ரீங்காரமொன்று இசைப்பதாய்
படித்தறிந்தே பரவசமாய் நான் இருந்து வந்தேன்
குழலினிது யாழினிது என்பார் என்றான் பாட்டன்
யாழினை படமதிலே கண்டு மகிழ்ந்தது உண்டு
யாழதனை யார் இப்போதிசைப்பர் என்றுமறியேன்
மழலைச்சொல் கேளாதார் என்றும் சொன்னான்
அச்சொல் மகிழ்வுதரும் என்பதையும் அறிந்தேன்
மலையருவி ஓசையெழுப்பும் சத்தமும் இன்பமாம்
மகளியர் கைவளை எழுப்பும் ஒலி மகிழ்ச்சியாம்
மருதநிலமதில் பணிபுரியும் மங்கையரின் குலவை
மல்லிகை தோட்ட பூப்பறிக்கும் பெண்களின் பாட்டு
எனவெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியென அறிந்தேன்
மூன்றுகுரங்கு பொம்மைகளை பார்த்திருந்தால்
அதில் இரண்டு பொம்மை போதும் என்றுணர்ந்து
கெட்டதை மட்டும் கேட்காதேயென சொல்வதுபோல்
செவிப்புலனை இயற்கையன்னை கொடுக்கவில்லை
அப்புலன் அவள் கொடுக்காததால் வருந்தவில்லை
எத்தனையோபேர் இத்தரையில் என்னிலும் கீழிருக்க
அத்தனையும் இகண்ணினால் நான் கண்டபின்னும்
செத்தொழியும் காலமது எல்லோர்க்கும் ஒன்றன்றோ
இத்தனையும் அறிந்தபின்னும் ஏனிங்கே மாந்தரெலாம்
தத்தளிக்கும் படகாய் நிலைகுலைந்தேன் போகிறாரோ?

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *