Friday, February 23, 2018

.
Breaking News

மாணவ சமூதாயம் எங்கே போகிறது?!

மாணவ சமூதாயம் எங்கே போகிறது?!

ஒரு காலத்தில் இலங்கையில் அரச உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர்கள் இருந்தார்கள். தமிழ் கல்விமான்களுக்கு கீழே அரச திணைக்களங்கள் இயங்கியது. தமிழர்களிடம் இருந்துதான் சிங்களவர்களும், முஸ்லிம்களும் சிறந்த கல்வியை பெற்றுக்கொண்டார்கள். அந்தளவிற்கு கல்வியில் கொடிகட்டிப்பறந்த சமூகமாக தமிழர்கள் இருந்தார்கள்.
கடந்த 30 வருடகாலம் நடைபெற்ற யுத்தத்தின் விளைவினால் தமிழர்கள் கல்வியில் வீழ்ச்சியைச் சந்தித்தார்கள். போராட்டம், அகதிவாழ்க்கை, அவலவாழ்க்கை, உயிரிழப்பு, சொத்திழப்பு என நிம்மதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். இருந்த போதிலும் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்ததொரு மாணவ சமூதாயத்தை தமிழனம் கொண்டிருந்தது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கூட சத்தமின்றி தேசிய ரீயில் நடைபெற்ற பரீட்சைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனைகளைப் படைத்திருந்தார்கள். கல்வி, கலை, கலாசார ரீதியில் ஒரு கட்டுக்கோப்பான ஒரு சமூகமாகவே தமிழ்ச் சமூகம் இருந்தத.
இன்று யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் சத்தம் இல்லாமல் தமிழ் மக்களின் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கின்ற ‘கலாசார சிதைப்பு யுத்தம்’ ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய நவின தொழில் நுட்பயுகம் நிறைந்த சவால் மிக்க வாழ்க்கையில் பண்பாடுகளையும், விழுமியங்களையும் கட்டியெழுப்புவது என்பது முயல் கொம்பாகவே இருக்கின்றது.
விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு கிழக்கில் கலாசார சீரழிவுகள் பாரியளவில் இடம்பெற்றிருக்கவில்லை. சிறுவர் துஷ;பிரயோகச் சம்பவங்கள் பற்றிய செய்திகளே மிக மிகக் குறைவாக இருந்தது. காரணம் அவ்வாறான கலாசார பிறழ்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட்ட கடும்  தண்டனைகளாகும். இத் தண்டனைக்குப் பயந்து பலர் கலாசார சீரழிவுகளில் ஈடுபடவில்லை. தமது ஐம்புலனை அடக்கி, ஒடுக்கி வாழ்ந்தார்கள்.
2009 யுத்தம் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் குறிப்பாக மாணவ சமூதாயத்தை இலக்கு வைத்து கஞ்சா, அபின், மதுபானம், பாலியல் உணர்வைத் தூண்டக்கூடியதான மாத்திரைகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களின் பாவனைகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. ஏற்கனவே போரினால் நலிவுற்ற சமூகமாக இருக்கும் தமிழனம் தற்போது போதைப் பொருள் பாவனையினால் சமூகச் சீரழிவுகளை சந்திக்கும் இனமாக மாறிவிட்டது.
மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே தமிழர்களின் நிலை மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். இன்று வடக்கு, கிழக்கில் வாழும் கட்டிளமைப் பருவத்தினரை குறிப்பாக பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் ‘போதைப் பொருள் யுத்தத்தில்’ சிக்கி சீரழிந்து போகும் நிலைக்கு மாணவ சமூதாயம் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு  மட்டக்களப்பு தாண்டவன்வெளி பாரதி குறுக்கு வீதியில் பாழடைந்த வீடொன்றில் பெண் ஒருவருடன் ஏழு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது அதிர்ச்சியான விடயமாகும். குறித்த வீட்டில் தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் நடைபெற்றுவருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். அங்கு கைது செய்யப்பட்டவர்கள் 17வயது மற்றும் 18வயதுடைய மாணவர்களும் அவர்களுடன் 26 வயதுடைய காத்தான்குடி பிரதேசத்தைச்சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அவ் வீட்டில் கஞ்சா, சிகரட், மது, ஆண் உறைகள் என போதைப்பொருள் பலவற்றையும் கைப்பற்றியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பிரதேசம் ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவனின் பெற்றோர் அம் மாணவனின் உயர் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பாக நகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தனது மகன் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இச் சூழ் நிலையில் இம் மாணவன் தீய நட்பு வட்டாரங்கலோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டுள்ளான் அத்துடன் சக மாணவர்களையும் கல்வி கற்றுக்கும் சாட்டில் தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளான். இந் நிலையில் தனிமையும், இளமையின் வேகமும், தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியும், கட்டியமைப் பருவத்தினராகிய இவர்களை தவறான நடத்தைக்கு வழி கோலியள்ளதாக தெரியவருகிறது.
மாணவப்பருவம் என்பது காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடக்கூடிய தன்மையுடையது. எது சரி? எது பிழை? ஏன்பதை ஊகித்து அறியக்கூடிய வயதல்ல. காண்பது எல்லாவற்றிலும் ஆசையும், கண்டிப்பவர்கள் எல்லோரிடத்திலும் கோபமும், விரக்தியும் ஏற்படக்கூடிய வயதாகும். புல பெற்றோர தங்களுடைய பிள்ளைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சயில் காட்டகின்ற அக்கறையில் ஒரு பங்கைக்கூட க.பொ.த.சாதாரணதரம் மற்றும் க.பொ.த உயர்தரம் ஆகியவற்றில் கற்கின்ற தருணங்களில் காட்டுவதில்லை.
பிள்ளைகள் தவறு இளைக்கக்கூடியவர்கள். தப்பும், தவறும் இளமைப்பருவத்தில் ஏற்படும் பருவக்கோளாறு என்றே கூறலாம். பெற்றோர்கள்தான் தங்களது பிள்ளைகள் மீது கண்ணும் கருத்துமாக இருந்து அவர்களை வளர்த்தெடுக்கவேண்டும். பிள்ளைகள் அடம் பிடிக்கின்றார்கள் என்பதற்காக அவர்களுக்கு கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லம் கொஞ்சி விளையாடுவதில் எவ்வித பிரயோசனமும் கிடையாது. அது அவர்களை மேலும் மேலும் பிழையான பாதைக்கே இட்டுச்செல்லும்.
பிள்ளைகளுக்கு வீட்டுக் கஷ;டத்தைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கவேண்டும். கஷ;டம் என்றால் என்னவென்று தெரிந்தால்தான் பொறுப்புணர்ச்சிமிக்க பிள்ளைகளாக வளர்வார்கள்.  அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்.சுசீலா இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணலர்கள் மத்தியில்கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாகவும், இங்குள்ள அதிகமான கடைகளில் விற்கப்படும் இணையத்தள அட்டைகள்(னயவய) சிம் காட் என்பன மாணவர்களினாலே கொள்வனவு செய்யப்படுகின்றது. என்ற தகவலை வழங்கியிருந்தார்.
அதிகமாக இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரையும் நித்திரையின்றி விழித்திருந்து பேஸ்புக், வைபர், வடஸ்;அப், இன்டர்நெற் ஆகியவற்றில் மூழ்கியிருக்கின்றனர்.அத்துடன் போதைப் பொருள் பாவனையும் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மீது கவனம் செலுத்தவேண்டும்.
தமது பிள்ளைகள் எத்தனை மணிக்கு ரியூசன் வகுப்புக்குச் செல்கிறார்கள்?, எத்தனை மணிக்கு ரியூசன் முடிந்து வீடு திரும்புகிறார்கள்?, பிள்ளைகளுடைய நண்பர்கள் யார்?, அவர்களது பின்புலம் என்ன?, ரியூசன் வகுப்புக்குச் செல்லும் ஆசிரியார் யார்?, அவரது தொலைபேசி இலக்கம் என்ன?, பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து பிள்ளை என்ன செய்து கொண்டிருக்கிறாள்? அவளது அன்றாடச் செயற்பாடுகள் என்ன? போன்ற பலவற்றையும் பொற்றோர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது கண்காணிக்கவேண்டும். அந்தளவிற்க்கு இன்றைய சமூகம் நவினத்துவம் என்னபேரில் கெட்டுக்கிடக்கின்றது.
இன்றைய நவின தொழில் நுட்ப யுகத்தில் பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் சவால் மிக்கதாகவேயுள்ளது. பிள்ளைகள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்க்கே பெற்றோர் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் உங்களது பிள்ளைகள் கல்வி கற்பதற்காகன பாதுகாப்பான ஒழுக்கமுள்ள ஒரு இடத்தை உருவாக்கி கொடுங்கள். தனிமையில் வீடு எடுத்து அதில் நண்பர்கள் பலரோடு சேர்த்து பிள்ளைகளை கல்வி கற்பதற்க்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதைப்பற்றி சற்று சிந்தித்து முடிவு எடுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்த பெற்றோர்களின் கைகளிலே தங்கியுள்ளது.

செ.துஜியந்தன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *