Thursday, December 14, 2017

.
Breaking News

போர் விமானத்தில் இருந்து சீறிப் பாய்ந்து இலக்கை தாக்கியது: பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி!

போர் விமானத்தில் இருந்து சீறிப் பாய்ந்து இலக்கை தாக்கியது: பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி!

இந்தியாவின் அதிநவீன ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று முதன்முறையாக போர் விமானத்தில் இருந்து சீறிப் பாய்ந்து கடலில் இருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்து உலக சாதனை படைத்தது.

இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும்.

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. பின்னர், ஒடிசா மாநிலம், பலசோரில் உள்ள சாந்தினி ஏவுதளத்தில் இருந்து ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை’ மீண்டும் சில முறை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், இந்த ஏவுகணை வானில் இருந்து இதுவரை பரிசோதிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுக்கோய் Su-30MKI ரக போர் விமானம் வான்வெளியில் பறந்தபோது விமானத்தில் இருந்து இன்று ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை முதன்முறையாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், வங்காள விரிகுடா பகுதியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும், இந்த பரிசோதனை முயற்சி இந்திய விமானப்படையின் தொலைதூர தாக்குதல் திறனுக்கு பக்கபலமாக அமையும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான பரிசோதனையின் மூலம் இந்தியா வரலாற்று சிறப்புவாய்ந்த உலக சாதனையை படைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *