Tuesday, December 12, 2017

.
Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் அக்கறை செலுத்தவில்லை!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் அக்கறை செலுத்தவில்லை!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர் பில் முன்னாள் நீதியமைச்சர் அக்கறை செலுத்தவில்லை. அத னாலேயே பிரச்சினைகள் தொடர்ந்து செல்கின்றன. இவ்விடயத் தில் தற்போதைய நீதியமைச்சர் தலதா அத்துகோரள கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தில் நீதியமைச்சுக் கான  ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ் வாறு குறிப்பிட்டார்.
சம்பந்தன் தொடர்ந்து குறிப்பிடுகையில், பயங்கர வாத தடைச்சட்ட த்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் பல வருட காலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்ற போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லையென சுட்டிக்காட்டினார். பய ங் கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, மாற்று சட்ட மொன்றை கொண்டுவருவதாக சர்வதேச த்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், அந்நடவடிக்கை தாமதிக் கப்பட்டு வருகின்றதென சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரத மரின் தலையீட்டுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளி ட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரை யாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து, அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றி செயற்பட வேண்டுமென நீதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, பிரிக்கப்படாத நாட்டிற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவி த்துள்ள நிலையில், பிரிவினைவாதிகள் சிலரே இதனை குழப்ப முனைவதாக சம்ப ந்தன் குறிப்பிட்டார்.
இதனை அரசாங்கம் உணர்ந்து செயற் பட வேண்டுமென குறிப்பிட்ட சம்பந்தன், நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டு மாயின் தமிழ் அரசியல் கைதிகள் அனைவ ரையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *