Tuesday, December 12, 2017

.
Breaking News

வாள்வெட்டு குழுவிற்கெதிராக விசேட அதிரடிப்படை நடவடிக்கை விரைவில் அவசர இலக்கமும் அறிமுகம்!

வாள்வெட்டு குழுவிற்கெதிராக விசேட அதிரடிப்படை நடவடிக்கை விரைவில் அவசர இலக்கமும் அறிமுகம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொட ர்புடையவர்களை கைது செய்வதற் கும், வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் விசேடஅதிரடிப் படையினர் ரோந்து நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ரோந்து நட வடிக்கை தொடர்பாக பொது மக்கள் அச்ச மடைய வேண்டாமென்றும் விசேட அதிரடிப் படையின் வடமாகாண உயர் அதிகாரி  நேற்று தெரிவித்தார்.
யாழ்.பண்ணையில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அவற்றினை  கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடு பவர்களை கைது செய்வதற்கான நடவடி க்கைகள் முன்னெடுக்கப்படும்.
குறிப்பிட்ட சிலரே இவ்வாறான வாள் வெட்டுச் சம்பவங்களை செய்கின்றார்கள்.
இவ்வாறானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவ சியமென்றும், தங்களின் பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவ ர்கள் தொடர்பில் தெரிந்தால், யாழ்.பண்ணை யில் உள்ள விசேட அதிரடிப் படை முகா மிற்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டு ள்ளார்.
அதேவேளை, இவ்வாறான தகவல் களை அறிவிப்பதற்கு அவசர அழைப்பு இல க்கம் ஒன்றினை மிக விரைவில் அமைக்க வுள்ளதாகவும், அந்த இலக்கத்தின் மூலம் அறிவிக்க முடியுமென்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *