Thursday, December 14, 2017

.
Breaking News

காஷ்மீரில் மீண்டும் ஒரு சம்பவம் தாயின் கோரிக்கையை ஏற்று பயங்கரவாதத்தை கைவிட்ட வாலிபர்!

காஷ்மீரில் மீண்டும் ஒரு சம்பவம் தாயின் கோரிக்கையை ஏற்று பயங்கரவாதத்தை கைவிட்ட வாலிபர்!
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கால்பந்து வீரரான மஜித் கான் என்பவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். மஜித் கானின் தாயார் தனது மகன் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என கூறி கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்து விட்டு மனம் திருந்திய மஜித் கான் பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு ராணுவத்தினரிடம் சரண் அடைந்தார்.
இதே போன்ற மற்றொரு சம்பவம் காஷ்மீரில் நடந்து உள்ளது. காஷ்மீரின் தெற்கு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார். அவருடைய பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த வாலிபர் பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு நேற்று வீடு திரும்பினார்.
அந்த வாலிபரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
மற்றொரு சம்பவமாக ஷேபியான் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் ஹூசேன் பாத், என்கிற வாலிபர் பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு வீடு திரும்ப வேண்டுமென அவருடைய பெற்றோர் கோரிக்கை விடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *