Tuesday, December 12, 2017

.
Breaking News

இடைக்கால அறிக்கை குறித்து நேரடி விவாதத்திற்குத் தயார்!- சுமந்திரன் பகிரங்க சவால்!

இடைக்கால அறிக்கை குறித்து நேரடி விவாதத்திற்குத் தயார்!- சுமந்திரன் பகிரங்க சவால்!
இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர் களாக இருந்தாலும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முறக்கொட்டாஞ்சேனையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்றுத் தெற்குப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமஷ்டி குறித்து யாரும் பயப்படத் தேவை யில்லை. சமஷ்டியை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரித்தானியர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் கண்டிய சிங்களவர்கள்.
இது சிங்கள மக்களுக்கு எதிரானது என எவரும் கூற முடியாது. இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூற வேண்டும்.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்கள் பார்த்து பயப்படும் ஒன்றாக இருக்க கூடாது. சொற்களைக் கண்டு பயந்தால் அந்த சொற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்க ளைப் பார்க்க வேண்டும்.
70 ஆண்டுகளாக எமது மக்களின் அபிலாசைகளாக இருந்த எங்களை எமது மாநிலத்தில் ஆட்சி செய்கின்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா? எனப் பார்க்க வேண்டும்.
எங்களுடைய மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்க ப்பட்டுள்ளது என எவராலும் கூற முடியாது. நாங்கள் தற்போது அரைவாசி தூரம்தான் வந்துள்ளோம்.
இதுகாலவரை நாங்கள் இழந்த இழப்புக ளுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வருகின்ற சந்தர்ப்பத்தை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட  வேண்டும் என்று சொல்லுகின்ற வர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *