Thursday, January 18, 2018

.
Breaking News

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கிரிமினல்களை என்கவுண்டரில் சுட்டுக் கொல்வோம்!

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கிரிமினல்களை என்கவுண்டரில் சுட்டுக் கொல்வோம்!

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் அங்கு ஆட்சியை பொறுப்பை ஏற்றதில் இருந்து முதல்- மந்திரியான ஆதித்யநாத் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதோடு பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க கிரிமினல்களை என்கவுண்டரில் சுட்டுக் கொல்வோம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். காசியாபாத் ராம் லீலா மைதானத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

குற்றவாளிகளை நாங்கள் கடுமையாக தண்டிப்போம். அவர்களது வாழ்க்கை இனி கடினமாக இருக்கும். அவர்களுக்கு இரண்டு இடம் தான் உள்ளது. ஒன்று ஜெயில். மற்றொன்று எமதர்மராஜா வீடு. கிரிமினல்கள் ஜெயிலுக்கு செல்வார்கள். அல்லது போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா தொண்டர் மற்றும் அவரது 2 உதவியாளர்கள் 3 பேரால் சுடப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் முதல்-மந்திரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *