Tuesday, November 21, 2017

.
Breaking News

மீற்றர், பிரமிட் வட்டி சட்டமுரணானது பணம் பெறுபவர், கொடுப்பவர் குற்றவாளி !

மீற்றர், பிரமிட் வட்டி சட்டமுரணானது பணம் பெறுபவர், கொடுப்பவர் குற்றவாளி !
யாழ்ப்பாணம் நீதவான் நீதி மன்றினால் காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்கள் மோசடி தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பானது கடன் பெற்றுக்கொள்ளப்பட்ட நபர் மீள அப்பணத்தை கடன்கொடுத்த வருக்கு செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பினை சட்டரீதியற்றது என தீர்ப்பளித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றமானது  சட்ட முரணாக நடைபெறும் மணித்தியாலம்,  நாள்,  மாதம் போன்ற சட்ட முரணான மீற்றர் வட்டி வியாபாரங்களுக்கு நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் சொல்லி நீதி பெறப்பட முடி யாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கியொன்றில் பணிபுரியும் நபரான வீரசிங்கம் சயந்தன் என்பவரிடம் தியேட்டரு க்கு தேவையான பொருட்களை வாங்கித்த ருமாறு கூறி அவரிடம் 47இலட்சத்து 85 ஆயிரம் ரூபா கொடுத்திருந்ததாகவும் ஆனால் அவர் தியேட்டர் பொருட்களை வாங்கி தராத துடன் பெற்றுக்கொண்ட பணத்தை மீள வழ ங்காது அதற்காக ஐந்து காசோலைகளை வழங்கியதாகவும் அவற்றில் பணம் எதுவும் இல்லை என கூறி நபரொருவர் பொலிஸார் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது யாழ்.நீதவான் நீதி மன்றால் விசாரணை செய்யப்பட்டு எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நபரான வங்கி ஊழியரை குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன் குறித்த நபர் முறைப்பாட்டாளருக்கு 47இல ட்சத்து 85ஆயிரம் ரூபாயினையும் மீள செலுத்த வேண்டும் எனவும், அத்துடன் இர ண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்பளித்திருந்தது.
இத் தீர்ப்புக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இத னையடுத்து அம்மேன்முறையீட்டு மனுவ னாது யாழ்.மேல் நீதிமன்றினால் விசாரணை செய்யப்பட்டு அதற்கான தீர்ப்பானது நேற் றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.
இம் மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பில் நீதிபதி சில விடயங்களை சுட்டிக் காட்டியிருந்தார். இதன்படி, மீற்றர் வட்டி, பிர மிட் வட்டி என்பன சட்டமுரணான செயற்பா டுகள் ஆகும். இதற்கு பணம் கொடுப்பவரும் குற்றவாளி, பணம் பெறுவரும் குற்றவாளி. சட்ட முரணான வட்டிக்கு நீதிமன்றில் சட்ட ரீதியாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
இத்தகைய மீற்றர் வட்டியானது யாழ்ப்பா ணத்தில் ஒரு குடும்பத்தையே காவு கொண்டு ள்ளது. ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந் தைகள் இறந்து போனார்கள். இது ஒரு வாழ் க்கைப் பாடம். இத்தகைய சட்டமுரணான மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி போன்றவற்றுக்கு ஒப்பந்தங்களை சட்டத்தரணிகள் எழுதுவது சட்ட முரணானது. சட்டரீதியான வட்டி என் பது வங்கி சேமிப்பே.
மணித்தியால வட்டி, நாள் வட்டி போன்ற சட்டமுரணான செயற்பாடுகளை உடனடி யாக அனைவரும் நிறுத்த வேண்டியதுடன் அவற்றுக்கு நீதிமன்றங்களில் பொய் சாட்சி மூலம் நீதி பெற முடியாது. கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியில் பதிவு செய்ய வேண்டும். மத்திய வங்கியில் பதிவு செய்யாத நிறுவனங்கள் அனைத்தும் சட்ட முரணான நிதி நிறுவனங்களாகும்.
மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறு வனங்களை மேற்பார்வை செய்ய வேண்டி யது மத்திய வங்கி ஆளுநரின் கட மையா கும். எந்த நிதி நிறுவனங்கள் மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி அறவிடுகின்றன என்பது தொட ர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய வங்கி ஆளுநரின் கட மையாகும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதி பதி  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *