Tuesday, November 21, 2017

.
Breaking News

இலங்கையின் மனித உரிமைகள்! அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

இலங்கையின் மனித உரிமைகள்! அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!
இலங்கையின் மனித உரிமைகள் தொடர் பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக காலாந்தர மீளாய்வு செயற்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை சார்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு இதில் கலந்து கொள்ளவுள்ளது.
அனைத்துலக காலாந்தர மீளாய்வு என்பது ஐக்கிய நாடு கள் சபையில் அங் கத்துவம் வகிக்கும் சகல நாடுகளினதும் மனித உரிமைகள் தொடர்பான அறிக் கையை ஏனைய பிற உறுப்பு நாடுகளி னால் மீளாய்வு செய் யப்படுவதை குறிக் கின்றது.
 இது 2006ஆம் ஆண்டு முதல் அமுல் படுத்தப்படுகிறது. உறுப்பு நாடுகள், சம் பந்தப்பட்ட நாட்டின் மனித உரிமைகள் பற்றிய பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளன.
பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவோ, அதனை பதிவு செய்து கொள்வதற்கோ சம் பந்தப்பட்ட நாட்டுக்கு வாய்ப்பு காணப்படுகிறது.
இலங்கை 2008 ஆம், 2012ஆம் ஆண்டு களில் அனைத்துலக காலாந்தர மீளாய் வுக்கு உட்படுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *