Tuesday, November 21, 2017

.
Breaking News

புலம்பெயர் ஈழத்து தமிழ் இளையோருக்கும், ஈழத் தமிழ் சமூகத்திற்கும் ஓர் பகிரங்க மடல் !

புலம்பெயர் ஈழத்து தமிழ் இளையோருக்கும், ஈழத் தமிழ் சமூகத்திற்கும் ஓர் பகிரங்க மடல் !

நீங்களே எமது நம்பிக்கை !

தலைவர் பிரபாகரன் அவர்கள் 2008 கார்த்திகை இறுதி மாவீரர் உரையில் உறுதியாக குறிப்பிட்ட விஷயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் குறிப்பிட்ட என்னவென்றால். தமிழ் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்த நிலையில் தனது உரையினை ஆற்றியிருந்தார் . மேலும் குறிப்பிடுகையில். போராட்டம் இனிமேல் புலம்பெயர்ந்து பல்வேறு உலக நாடுகளிலும் வாழ்த்து வரும் சர்வதேச தமிழ் இளையோர் கையில் ஒப்படைத்து விடுவதாக உறுதியாக வெளிப்படுத்தி விட்டார். இந்த நிலையில் இங்கே தமிழ் தேசியம் பேசியும் , மாவீரர் நாள் கொண்டாடியும் , போலி தேசியம் பேசியும் வயிற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளையும், அமைப்புக்களையும் புலம்பெயர் தமிழ் மக்கள் இனியாவது இனங்கண்டு கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழ் இளையோர் ஈழப் போராட்டத்தை புதிய வழிமுறைகளினூடாக நகர்த்தி செல்ல வேண்டும். இங்கே இலங்கையில் தேர்தல் காலத்தில் தேசியம் பேசுவோரை தமிழர் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்ட இப்போதிருந்தே சகல இராஜதந்திர செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

நன்றி ,

சகாதேவன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *