Tuesday, November 21, 2017

.
Breaking News

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை:ஜிவி பிரகாஷின் மறுபக்கம்!

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை:ஜிவி பிரகாஷின் மறுபக்கம்!

தமிழ்நாட்டில் கழிப்பறை இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த பள்ளிகளிலும் கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்று நோக்கத்தில் ஜீவி பிரகாஷ், our village our responsibility என்ற , அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் விருதுநகர், விழுப்புரம், அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் கழுப்பறை கட்டப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு, நல்ல வரவேற்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பல அழைப்புகள் வருவதாகவும் ஜிவி தனது ட்விட்டர் பக்கதில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டில்’ எல்லாரும் இணைந்தால் எதுவும் சாத்தியப்படும். என் பங்களிப்பிலிருந்து துவங்குகிறோம் நீங்களும் உதவிக்கரம் நீட்டுங்கள். கழிப்பறை வசதி இல்லையென்று இனி என் சகோதரி யாரும் படிப்பை நிறுத்தகூடாது’ என்று கூறியுள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *