Wednesday, November 22, 2017

.
Breaking News

காமினி செனரத் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு!

காமினி செனரத் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலய பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக காமினி செனரத் அண்மையில் உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.

தம்மை நிதி ​மோசடி விசாரணை பிரிவினர் கைது செய்யாதிருக்க உத்தரவிட வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனு அண்மையில் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *