Wednesday, November 22, 2017

.
Breaking News

இனி என்றும்…! சங்கர சுப்பிரமணியன்.

இனி என்றும்…!  சங்கர சுப்பிரமணியன்.

தூரத்தே தொடுவானம் தெரிகிறது

அப்படியா இன்னும் மேலே சொல்லுங்கள்
அங்கே புள்ளிகளாய் இரு பறவைகள் பறக்கின்றன
ஒன்று ஆண் மற்றொன்று பெண்ணாய் இருக்கக்கூடும்
நம்மைப் போல் அவைகளும் என்று
சொல்லுங்கள்
ஆம் நம்மைப்போல்தான் அவையும்
அதிலென்ன சந்தேகம்
தொலைதூரம் அவை பறந்து செல்வதுபோல்
நெடு நாட்கள் என்னோடு துணையாய் வருவீரா?
நிச்சயமாய் வந்திடுவேன் ஐயம் வேண்டாம்
தொடுவானத்தினடியே கோபுரமும் தெரிகிறது
அப்படியா அங்கொரு ஆலயமும் இருத்தல் வேண்டும்
ஆம் கண்ணே நிச்சயமாய் ஆலயம் அங்கிருக்கும்
இருக்குமெனில் நம்போல் ஆண்பெண்ணென சிலைகள் அங்கிருக்கும்
சந்தேகமின்றி ஆண் பெண் சிலைகள் அங்கிருக்கும்
அச்சிலைகள் அங்கே சேர்ந்திருப்பது போல்
என்னைவிட்டும் நீங்காது என்றும் இருப்பீரா
நிச்சயமாய் நான் இருப்பேன் நம்பு கண்ணே
என்னவது ஆவென்று ஏன் இப்போ கத்தியதேன்
கல்லொன்று காலில் தட்டி வலித்ததுதான்
அப்படியா இப்போதே நான் அதைப் பார்க்கிறேன்
குனிந்து காலில் என்ன நீங்கள் செய்கிறீர்கள்
ஒன்றுமில்லை சிறிதே ரத்தம் வர
கைக்குட்டையினால் அதை நான் துடைத்து விட்டேன்
சிறிதளவு ரத்தத்துக்கா என் பத்து விரல்களும் நனைய
உங்கள் கண்ணில் கண்ணீர் ஆறாய் கொட்டி வழிகிறது?
விழியிலா எனக்கு வழித்துணையாய் வரும் உமக்கு…
மேலே ஏதும் சொல்லவேண்டாம் என் அன்பே நானே இனி என்றும் உன் கண்கள்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *