Wednesday, November 22, 2017

.
Breaking News

கிரகப் போர்12… } காசியரின் பேரன்.

கிரகப் போர்12… } காசியரின் பேரன்.
நண்டுங்கா கிரகத்திலிருந்து மாங்கதிர் கிரகத்தை நோக்கிப் சாமியும் சுந்தரியும் பயணித்துக் கொண்டிருந்த விண்கலம் பூமியில் உள்ள மனிதர்களை விண்கலத்திலிருந்து அண்மையாக பார்கக்கூடிய உயரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
சாமியும் சுந்தரியும் வாழ்ந்த வீட்டுக்கு மேலே அந்த விண்கலம் நிலைகுத்தி நின்றது.சாமியும் சுந்தரியும் தமது வீட்டையும் படிக்கட்டுகளையும் தெருவையும் முழுமையாகப் பார்த்தார்கள்.அந்தத் தெருவில் வாழும் சாமியும் சுந்தரியும் பலரை அறிந்த வைத்திருந்தபடியால் வீட்டு வாசலிலும் தெருவில் போய்க் கொண்டிருப்போரையும் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
பலூன் போன்ற வின்கலம்  மிதந்து கொண்டிருப்பதை கீழே உள்ளவர்களால் நன்றாகவே பாரக்க முடிந்தது. அதில் ஏதோ விசித்திரமான உருவங்கள் தெரிவது போலவும் அவற்றில் இரு உருவங்கள் மனித உருவில் தெரிவதையும் பார்;த்தார்கள்.
தெருவில் நின்ற பன்னிரண்டு வயது மதிக்கக்கூடிய சிறுவனின் கண்கள் கூர்மையானiவாக இருந்திருக்க வேண்டும், பக்கத்தில் நின்ற தாயாரிடம் ‘அம்மா அதற்குள் இருப்பது சுந்தரி அன்ரியும் சாமி மாமாவும் போல இருக்குதம்மா’ அதற்குத் தாய் ‘அவர்களை நினைத்துக் கொண்டிருப்பதால் அதற்குள் இருப்பவர்கள் சாமியும் சுந்தரியும் போல உனக்குத் தெரியுது என்று அவள்  சொன்னாள்.
பூமியில் நின்று பேசியவர்களின் குரல்கள் அச்சொட்டாக சாமிக்கும் சுந்தரிக்கும் அண்மையில் கேட்பது போல கேட்கின்றது.
சிலர் இது ஏலியன்சின் பறக்கும் தட்டோ என்கின்றனர். ஏலியன்சாவது மண்ணாங்கட்டியாவது இது அமெரிக்காவின்ரை வேலை என்கின்றனர்.தெருவிலும் அந்தச் சுற்றுவட்டாரத்திலும் பெருங்கூட்டமே கூடிவிட்டது. பலூன் போன்ற பறக்கும் வின்கலம் அசையாமல் அப்படியே நின்றது.
நண்டுங்கா மனிதர்கள் அதற்குள் அங்குமிங்குமா நடந்து கொண்டிருப்பதை கீழே இருப்பவர்களால் தெளிவாக பார்க்க முடிந்தது.
சாமியும் சுந்தரியும் தனக்குத் தெரிந்தவர்கள் கீழே இருக்கிறார்களா எனப் பார்த்தார்கள். சிலரை அவர்களால் அடையாளம் காண  முடிந்தது.
சாமியும் சுந்தரியும் கையசைக்க கீழே உள்ளவர்களும் கையசைத்தார்கள்.பன்னிரண்டு வயதுச் சிறுவன் மீண்டும்’ அம்மா நான் சொன்னேனே அது சந்தரி அன்ரியும் சாமி மாமாவுந்தான்’ என்றான்.
தாய் இந்த முறை மறுக்கவில்லை, ‘ஓம் போலத்தான் கிடக்குது’ என்றாள்.
மிதந்து கொண்டிருந்த அந்த பலூன் வின்கலம் திடீரென நிலத்தை நோக்கி இறங்கி நிலத்திலிருந்து ஒரு மீற்றர் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
வேற்றுக்கிரகத்திலிருந்து பலூன் போன்ற வின்கலம் கண்களால் பார்க்கக் கூடிய உயரத்தில் மிதந்த கொண்டிருந்த செய்தி வேகமாக பரவியதால் வின்கலம் மிதந்து கொண்டிருந்த பகுதியில் ஏராளமான மக்களகுவியத் தொடங்கிவிட்டார்கள். வின்கலத்தைப் பார்க்க தொடர்ந்தும் வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு மீற்றர் உயரத்தில் வின்கலம் மிதந்து கொண்டிருந்ததால் பலர் வின்கலத்திற்கு அருகில் போவதற்கு தயங்கினார்கள்.ஆனால் சிலர் தயங்கி தயங்கி வின்னலத்தின் அருகில் சென்றார்கள்.
அப்பொழுது வின்கலத்தின் கதவு திறந்து கொண்டது.இதற்கிடையில் செய்தி அறிந்து பத்திரிகையாளர்கள் அவ்விடத்திற்கு விரைந்தார்கள்.
கைத்தொலைபேசி வைத்திருந்தவர்கள் வின்கலத்தை படம் பிடித்தார்கள். திறந்த கதவின் ஊடாக நண்டுமுக மனிதர்கள் வந்து நின்றதும் அருகில் சென்றவர்கள் பயத்துடன் விலத் தொடங்கினார்கள்.
அவர்களைப் பார்த்து ‘பயப்பட வேண்டாம் நாங்கள் நண்டுகிரகத்தின் மனிதர்கள், எங்களால் எல்லா மொழிகளையும் பேச முடியும்’ எனச் சொன்னதும் கூடியிருந்த மக்கள் திகைப்புடன் நிற்க, நண்டுமுக மனிதர்கள் உள்ளே செல்ல சாமியும் சுந்தரியும் வாசலடியில் வந்து நின்றார்கள்.
‘சாமி சுந்தரி’ என சாமிக்கும் சுந்தரிக்கும் தெரிந்தவர்கள் கூச்சலிட்டார்கள்.அவர்களிருவரும் கையசைத்தார்கள்.
ஒரு சில விநாடிகளில் வின்கலம் மிக வேகமாக மேலெழுந்து மறைந்தது.
வின்கலத்தின் படம், நண்டு மனிதர்களின் படங்கள், சாமி சுந்தரியின் படங்கள் வின்கலம் வந்து சென்ற சில நிமிடங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து மொழி இணையத்தளங்களிலும் செய்தியாக வெளிவரத் தொடங்கியது.
அங்கு நின்றவர்கள் தாங்கள் பார்த்த அனுபவங்களை பத்திரிகையர்ளர்களுக்குச் சொல்ல அந்தச் செய்:திகளும் அடுத்தடுத்த நாட்கள் உலகப் பத்திரிகைள் எல்லாவற்றிலும் தொடர்ந்து வர் தொடங்கின.
இதுவரை காலமும் வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறார்கள் என்பதும் அப்பப்ப பூமிக்கு வந்து போகிற ஏலியன்ஸ்கள் பற்றிய செய்திகளை அறிந்து வைத்திருந்த மக்கள் முதல்முறையாக நண்டுமுக மனிதர்களையும் அவர்களோடு இருந்த சாமியையும் சுந்தரியையும் கண்டதும் முழுமையாக நம்பத் தொடங்கினார்கள்.
கிட்டத்தட்ட ஆறுமாதமாக சாமியையும் சுந்தரியையும் அவ்வூரில் காணாத மக்கள் வின்கலத்தில் சாமியையம் சந்தரியையும் கண்டதும் அவர்கள் கடத்தப்பட்டார்களா அல்லது விரும்பிச் சென்றார்களா எனப் பேசத் தொடங்கினார்கள்.
பூமியில் இரவோடு இரவாக பல கிராம மக்களே காணாமல் போன சம்பவம் ஆயிரம் வருடங்களுக்கு முன் உலகின் பல பாகங்களிலும் நடந்திருக்கின்றன.அவை தரவுகளோடு செய்திகளாக, ஆய்வுகளாக வெளிவந்திருக்கின்றன.
வேற்றுக்கிரக வாசிகளால் பல லட்சம் மக்கள் கடத்தப்பட்டு வேற்றுக்கிரகங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்தகு வேற்றுக் கிரகங்களை இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை.
அக்கிரகங்கள் யாவும் பரந்து விரிந்து எல்லையில்லாமலிருக்கும் பிரபஞ்ச வெளியில் சிந்திக்க முடியாத தூரத்தில் இருக்கின்றன.
பூமிக்கும் வேற்றுக்கிரகங்களிலிருந்து மனிதர்கள் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தபட்டுள்ளமையும் மனிதர்களின் மூதாதையர்கள் வேற்றுக்கிரகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையை மாங்கதிர் கிரக மனிதர்கள் சாமியையும் சந்தரியையும் அழைத்துச் சென்றதிலிருந்து நிரூபணமாகிட்டது.
தொலைக்காட்சிகளின் மக்கள் முன்னால் வின்கலத்தின் வருகையை ஒளிபரப்புச் செய்யும் செய்திகளை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க சாமியும் சந்தரியும் இப்பொழுது மாங்கதிர் கிரகத்திற்கு  மீண்டும் பயணப்பட்டு அங்கு வசிக்கத் தொடங்கினார்கள்.
அவர்களிருவரும் மாங்கதிர் கிரகத்தில் தமக்குரிய பணியைச் செய்ய ஆயத்தமானார்கள்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *