Sunday, January 21, 2018

.
Breaking News

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்!

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்  தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்!

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 11ஆம் தேதி தொடங்கி எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. வரும் 11-ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கும்.

இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள் தங்களது மொழி சார்ந்த இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. தமிழ் மொழியில் இந்த ஆண்டு இலக்கிய ஆளுமையாக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன் தேர்வு செய்யப்பட்டு சார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடனான வாசகர்கள் சந்திப்புநேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. அவரது துணையெழுத்து என்ற நூல் இந்த நிகழ்ச்சியின் கருவாகஅமைக்கப்பட்டிருந்தது.

அவர் தனது உரையில் தன்னை இந்த புத்தக கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ் வாசகர்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன். தன்னை அடையாளம்காட்டும் வகையில் பிரபல வார இதழில் வெளியான Ôதுணையெழுத்துÔ மிகவும் முக்கியமாக இருந்தது. இது பின்னர் நூலாகவெளியிடப்பட்டது. அந்த நூல் இதுவரை 35 பதிப்பை கண்டுள்ளது. தொடர்ந்து இந்த நூலின் விற்பனை அதிகரித்து வருகிறது.

தன்னை ஒரு சீரியசான எழுத்தாளர் என்ற அடையாளத்தை இந்த கட்டுரை மாற்றியமைத்தது. இதில் சமூகத்தில் நடைபெறும்நிகழ்வுகளை எழுத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டியிருந்தேன். அது பலரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது.

தமிழ் இலக்கியத்துக்காக பாடுபட்ட கம்பர், சீத்தலைச் சாத்தனார், மாங்குடி மருதன்  உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளனர். அவர்கள்அனைவரும் இலக்கியத்துக்காகவே தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் எங்கு இருந்தார்கள், எங்குமறைந்தார்கள் என்பன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே நினைவிடம்அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெள்ளி வீதியார் என்ற பெண் காதல் கவிதைகளை சிறப்புடன் எழுதி வந்தவர். அவர் குறித்த தகவல்களை இலக்கியஉலகம் மிகவும் அரிதாகவே தெரிய முடிகிறது.

வரலாறு, மொழி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்து வருவது தமிழ் இனம் ஆகும். தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது.

செய்தித்தாள்களில் மருத்துவ உதவி கேட்டு வரும் விளம்பரங்களை பார்த்து சாமான்யர்கள் சிறு உதவிகளை செய்து வருவதுகுறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெரிய அளவிலான உதவிகள் சென்று சேர முடியாவிட்டாலும், அந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தும் வகையில் காவலாளி உள்ளிட்ட சிறு வேலைகளை செய்து வருவது தனது எழுத்துக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும்.

ஒரு சிறு உதவி செய்தாலும் அதனை நன்கொடையளிப்பவர்கள் தங்களது பெயரை அந்த பொருளில் பதிப்பவர்களுக்கு மத்தியில்தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மன்னர்களின் சேவைகள் மிகவும் பெருமைக்குரியது ஆகும்.

எனது வாழ்வை  ஒரு எழுத்தாளனாக மட்டுமே அமைத்துள்ளேன். பலர் அரசு அல்லது அவரவரது விடுமுறைகளை அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனம் நிர்ணயிக்கும். எனினும் எனது விடுமுறையை நானே நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன்.

மேலும் இந்திய வரைபடத்தை பார்த்த நான் அந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்டேன். இது எனக்கு ஒருபுதிய அனுபவத்தை அளித்தது. இதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கம்பம் தினேஷ், மதுரை அக்மல் ஹசன், காரைக்குடி ஹமீத் உள்ளிட்ட வாசகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *