Sunday, February 18, 2018

.

கல்…புல்…காகம்…4..( நாவல் ) …. …. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்…4..( நாவல் ) ….  …. சங்கர சுப்பிரமணியன்.
திண்டுக்கல்லில் இருந்து ரயிலில் சென்றால் ஒருமணி நேரத்துக்குள் சென்று விடலாம். ஆனால் அப்படி செல்வது
எப்போதும் சாத்தியப்படாது. ஆனால் பேருந்தில் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனவே மனோவும்
பேருந்தில் செல்ல முடிவெடுத்தான். பேருந்தில் சென்றால் இரண்டு மணிநேரம் ஆகும். இரவில் வீடுசென்று
படுக்கவேண்டியதுதான் என்பதால் அதிகப்படியான ஒருமணி நேரத்தைப்பற்றி கவலைப்படாமல் பேருந்தில் ஏறி
அமர்ந்தான். 
பேருந்து மதுரை பேருந்துநிலையத்தில் நின்றதும் அங்கிருந்து நகர பேருந்தைப்பிடித்து பழங்காநத்தத்தில்
இருக்கு தன் வீட்டுக்கு வந்தான். வீட்டில் அம்மா மட்டும் பக்கத்துவீட்டு மரகதம் மாமியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எதிர் பாராமல் மனோவைப் பார்த்ததும்,
“வாப்பா, வா மனோகரா! என்ன திடுதிப்பென்று வந்து நிற்கிறாய். வருவதாய் ஒரு போன் கூட பண்ணலையே” அம்மா
மனோண்மணி கேட்டாள்.
“ஒன்றும் விசேசம் இல்லை. வரவேண்டும் என்று தோன்றியது வந்தேன் அம்மா. அவ்வளவுதான்”
“உனக்கு விசேசம் இல்லாவிட்டாலும் உன் அம்மாவுக்கு விசேசம் இருக்கு. நீ வந்ததும் ஒருவகையில் நல்லதாய்
போயிற்று” என்றார் மரகதம் மாமி.
“என்னம்மா, விசேசம்? மாமி விசேசம் என்கிறார்களே?”
“நானே சொல்லிடறேன் மனோகரா! எல்லாம் நல்ல காரியம்தான். உன் திருமணம்பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்”
“என்னது எனக்கு திருமணமா? அதுக்கு என்ன இப்ப அவசரம் அம்மா?”
“இப்ப இல்லாம எப்பவாம்? வயது முப்பது நடந்து கொண்டிருப்பதை மறந்து விட்டாயா?”
அம்மா இப்படிச் சொன்னதும் ஒன்றும் பேசாமல் தனக்கு கைபேசியில் அழிப்பு வரவே “ஹலோ” என்று சொன்னபடியே
தனது அறைக்குள் சென்றான். மறுமுனையிலிருந்து விமலதான் கூப்பிட்டாள். எங்கிருக்கிறாய்? மதுரை சென்று
விட்டாயா? பள்ளி முடிந்ததும் என்னிடம் வந்து சொல்லிவிட்டு செல்வாய் என்று எதிபார்த்து காத்திருந்தேன். நீ சொல்லாமல்
சென்றுவிட்டாய் என்றாள். அப்படி ஒன்றுமில்லை. காலையிலேயே சொன்னேன் அல்லவா அதனால்தான் பள்ளி
விட்டவுடனேயே நேரத்தை வீணடிக்காமல் புறப்பட்டு வந்துவிட்டேன். நம் திருமணத்துக்காக எவ்வளவு வேகமாக செயல்
படுகிறேன் பார்த்தாயா? இதற்காகவாவது இப்பாது போனிலேயே அழுத்தி ஒரு முத்தம் கொடுக்கலாம் இல்லையா
என்றான். அதற்கு அவளோ ஏன் இப்படி அலைகிறாய்? இனிப்பை நேரடியாக சாப்பிடுவதை விட்டு இனிப்பு என்று எழுதி
அதை நக்கினால் இனிப்பாகவா இருக்கும்? என்றவள் சொன்னதும் ஹி..ஹி..என்று அசடு வழிந்தான்.
பின் சட்டென்று சமாளித்தவன் நேரடியாக செயலில் ஈடுபடுவதில் ஒருவகை இன்பம் என்றால் அதைப்பற்றி பேசுவதில்
கூட ஒரு இன்பம் இருக்கத்தானே செய்கிறது. காதலர்கள் மணிக்கணக்காக கைபேசியில் கதைப்பதை நீ கண்டதில்லையா?
அதிலும் ஒருவகை சுகம் இருக்கவே செய்கிறது. உனக்கு கொஞ்சம் பயிற்சி கொடுக்க வேண்டியதுதான். அப்படி அவன்
சொன்னதும் அப்படியா தொரைக்கு அனுபவம் அதிகமோ. நான்தான் ஏமாந்து விட்டேனோ? வேறு யாரையாவது
கதலித்திருக்கிறாயா? என்று பொய்க்கோபத்துடன் அதட்ட அப்படியே மருண்டு போனான். என்ன விமலா இப்படியெல்லாம்
பேசுற. பூங்காக்களிலும் பொது இடங்களிலும் எத்தனையோ திருமணமாகாத இளம்பெண்களும் வாலிபர்களும் சிரித்துக்கொண்டே
காதில் கைபேசியை அணத்தபடி செல்வதெல்லாம் என்னவாம். அவர்கள் எல்லாம் மளிகைக்கடை கணக்கு வழக்கையா பேசி
சிரித்துக்கொண்டு போகிறார்கள். அவற்றையெல்லாம் பார்த்துத்தான் சொன்னேன். இதுக்குப்போய் என்னவெல்லாம்
சொல்கிறாயே என்று குரலை தாழ்த்தி பரிதாபமாகக் கெஞ்சினான்.
போதும் ரொம்பவும் சீன் போடதே என்றாள். பார்த்தியா நானிவ்வளவு சொல்லியும் நம்பலையா? என்று அசடுவழியத்
தொடங்கியவனை சரி உண்மையிலேயே உன்னை நம்பிட்டேன். முகத்தை தொடச்சுக்க. அசடு வழியதே இங்கு வந்ததும்
வட்டியும் முதலுமாய் தருகிறேன் என்றாள். அப்படி சொன்னவுடனே ‘அய்யா, வட்டியும் முதலுமாவா? என்று தன்னை மறந்து
கத்தவே மரகதம் மாமியை அனுப்பிவிட்டு மகன் அறைக்குவந்த அம்மாவின் காதில் அதுவிழ “என்னடா வட்டியும் முதலுமா
யாரிடமாவது வட்டிக்கு கடன் வாங்கி விட்டாயா? வட்டியும் முதலுமா கொடுக்கச்சொல்லி நிர்ப்பந்தப் படுத்துகிறானா கடன்
கொடுத்தவன். அப்படி எதற்கடா யாருக்காக கடன் வாங்கினாய் என்று கேட்டாள். இல்லம்மா என்னிடம்தான் ஒரு ஆசிரியர்
கைமாத்தா கொஞ்சம் பணம் கடன் வாங்கினார். இப்போது அப்பணத்தை வாட்டியும் முதலுமா திரும்ப தருகிறேன் என்கிறார்
என்றார். அதற்குத்தான் வட்டியும்  முதலுமாவா என்று கேட்டுக் கொண்டிருந்தேன் என்றான். அதற்கு அவன் அம்மா வட்டி
வாங்குவதோ தப்பு. அதுவும் கைமாத்தா கொடுத்த பணத்துக்கு வட்டி வாங்குவது பெரிய தப்பு என்றாள்.
உடனே அம்மாவைத்தடுத்த மகன் அம்மா எனக்கும் நல்லது கெட்டது தெரியும். நீ உண்மையை புரிந்து கொள்ளாமல்
குந்தி மகன்களுக்கு சொல்லியதைப்போல எதையாவது சொல்லி கெடுத்து வைக்காதே என்று சொல்லி போனில் பேசிக்
கொண்டிருக்கிறேன் அப்புறமா பேசுவோம் என்று அம்மாவை அனுப்பி வைத்துவிட்டு சாரி விமலா அம்மாதான் இடையில்
வந்து விட்டார்கள் என்றான். சரியானா ஆளுய்யா நீ! வட்டியும் முதலுமா நான் கொடுப்பதாய் சொன்னதை இழக்காமல்
இருக்க எப்படி சமாளித்தாய் என்றாள். பார்த்தியா? எவ்வளவு சிரமப்பட்டு நிலமையைச் சமாளித்தேன். அதனால் வந்ததும்
ஏமாற்றாமல் வட்டியும் முதலையும் கொடுத்து விடு என்றான். நீ நல்ல செய்தியை மட்டும் கொண்டு வந்து விடு வெறும்
வட்டி என்ன கந்துவட்டி, மீட்டர் வட்டியெல்லாம் போட்டு தருகிறென் என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். அடி பாவி
ஒன்றும் தெரியாதவள் போல் இருந்துகொண்டு கந்து வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் சொல்கிறாயே என்தலையே
சுற்றுகிறதே. முதல் மட்டும் தெரிந்தவனுக்கு வட்டி எப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது
என்னவென்றால் நீயோ கந்துவட்டி, மீட்டர் வட்டி எல்லாம் தருகிறேன் என்கிறாயே. எதற்கும் நான் கொஞ்சம் தயாராகவே
இருக்கவேண்டும் என்றான்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *