Saturday, February 24, 2018

.
Breaking News

மூடரும் விட்டில் பூச்சியும்:

மூடரும் விட்டில் பூச்சியும்:

விட்டில் பூச்சிக்குத் தெரியுமா
விளக்கு சுடுமென்று
விளக்கில் பாய்ந்து விட்டால்
விதியும் முடிந்து போகுமென்று
தெரியாமல் சுடரில் தாவி விழுந்து
தன் இன்னுயிரையும் இழக்கிறதே

தெரியாமலது தேடிப்போய் விழுகிறது
தேடிப்போய் விழுந்து மாய்ந்தொழிய
சுடரின் ஈர்ப்பன்றோ இழுக்கிறது

விட்டில் போல் சிலமனிதரும் இங்குண்டு
விட்டில் பூச்சிக்கோ சொந்த அறிவில்லை
சொந்த அறிவிருந்தும் விந்தை மனிதர்களோ
மற்றவர் பேச்சுக்கு மகுடிக்கு நாகம்போல
மயங்கிக் கிடந்து தன் மதியை இழக்கின்றார்

மற்றவர் பேச்சின் தன்மை உணராது
வள்ளுவன் சொல்லிய வார்த்தையின் சாரமான
குணமும் குற்றமும் நாடியதில் மிகை நாடாது
கவர்ச்சிப் பேச்சால் கண்ணிருந்தும் குருடாய்

விட்டில் பூச்சியது விளக்கில் ப்ய்வதுபோல்
மற்றவர் பேச்சால் மயங்கி மதியும் இழந்து
பொன்னிழந்து மண்ணிழந்து பொருளுமிழந்து
எல்லாம் இழந்தபின் அழுது புலம்புகின்றார்

இதயம் வலிக்கிறது இவர் கதையைக் கேட்டதுமே
மூடருக்கு வருந்தி ஏது பயன் நாமறிவோம்!

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts