Tuesday, November 21, 2017

.
Breaking News

காவடி சல்லிக்கட்டு அம்மன் மிருகபலி தமிழர்களின் தொன்மை!

காவடி சல்லிக்கட்டு அம்மன் மிருகபலி தமிழர்களின் தொன்மை!

காவடி சல்லிக்கட்டு அம்மன் மிருகபலி

தமிழர்களின் தொன்மை என்பது அவர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது.

அவுஸ்திரேலியாவில் நியுசிலாந்தில் பழங்குடிகள் பல்வேறு பிரிவினராக இருந்தாலும், அவர்கள் நவீன நாகரிக வாழ்க்கைக்கு மாறினாலும் தமது பழமையான கலை வடிவங்களை பாரம்பரிய நடைமுறைகளை தமது முக்கிய நிகழ்வுகளில் மறப்பதில்லை. மறைப்பதில்லை.

தமிழர்களின் காவடி ஆட்டம், காளை அடக்குதல், வேள்வியில் மிருகபலி என்பன தமிழர்களின் பண்டைய பாரம்பரிய வாழ்க்கை/வழிபாட்டுமுறைகளோடு பிணைந்தவை.

அம்மன், பைரவர், முனியப்பர், காத்தவராயர், ஐயப்பன், வீரபத்திரர், பத்திரகாளி அம்மன் போன்ற தெய்வங்களை குலதெய்வமாக வழிபாடு செய்யும் கிராமப்புற ஆலயங்களிலேயே மிருகபலி எனப்படும் வேள்வி செய்யப்படுவதுண்டு.

இத்தகைய வழிபாட்டுமுறையானது, சரிதவறுகளுக்கு அப்பால் பழமையானவை மனித பரிணாமவியலோடு தொடர்புபட்டவை. ஆகமவழிபாட்டுமுறைகளை கொண்ட இந்து சமயத்திலிருந்து வேறுபட்டவை.

அவை அன்னிய செல்வாக்கிலிருந்து தப்பி இன்றுவரை நிலைக்கும் தமிழரின் பண்டைய பாரம்பரியங்கள்.

மனித பரிணாம வளர்ச்சியில் இயற்கையை வழிபடும் பண்டைய பாரம்பரிய முறையோடு இணைந்தவை. வானத்திலருந்து தீடிரென குதித்தவை அல்ல.

எனவே பண்டைய பாரம்பரியங்கள் பின்பற்றப்படுவதில் நெறிபிறழ்வுகள் இருந்தால், அதற்கான திருத்தங்கள் வரவேண்டுமேயொழிய அதனை ஒட்டுமொத்தமாக இல்லாதொழிப்பது ஒரு இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு ஈடானது.

பலபேர் முன்னிலையில், இரத்தம் தெறிக்க வேள்வி என்ற பெயரில் மிருகபலி செய்யப்படுவதற்கு மாற்றான நெறிமுறைகளை பற்றி ஏன் சிந்திக்க கூடாது? ஏன் ஒட்டுமொத்த தடை?

Keethan Ilaythampy

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *