Tuesday, November 21, 2017

.
Breaking News

எனக்கு இப்படியோர் நிலைமை ஏற்படின் நானும் இதையேதான் செய்வேனா?

எனக்கு இப்படியோர் நிலைமை ஏற்படின் நானும் இதையேதான் செய்வேனா?

என் மரணத்தின் போதில் என் பிள்ளைகள் எப்படி அழுது துடிப்பார்கள் , அந்த துடிப்பை என் ஆத்மா தாங்குமா என்ற என் இறப்புக்கு பின்பான கற்பனையை கூட தாங்கிக்கொள்ள மறுக்கும் நான் என் குழந்தைகளையே எரிப்பேனா?

கையறு நிலையும், அவமானங்களும், எனைச்சூழ்ந்து வாழ்வின் எல்லை வரை கொண்டு சென்றபின், நான் இல்லா இந்த சமுதாயத்தில் என் பிள்ளைகளை மட்டும் வாழ விடுவார்களா? இல்லை வாழத்தான் முடியுமா என்று நான் இந்த முடிவை எடுத்திருப்பேனா?

நடப்பைகளுக்கு சரி, தவறென ஆயிரம் காரணங்கள் கூறலாம். அந்த நிலைமை நமக்கும் நேர்ந்து அதில் சிக்குண்டு தவிர்த்தால் மட்டுமே அவன் தார்ப்பரியம் புரியும்.

அந்த பிஞ்சுகள் வெந்து, வேகி கருகும் காட்சி கண்ட பின்னும் விஷாலுக்கும், விஜயைக்குமுள்ள பிரச்சினைய தலையாய பிரச்சினை என நினைக்கும் சமுதாயத்தையும், கேரள பெண்களா, தமிழ் நாட்டு பெண்களா அழகிகள் என்ற நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட கவலையில் விவாதம் நடாத்தும் தமிழ் நாட்டு ஊடகங்களையும் காறி உமிழ்ந்தால் கூட தகுமா?
பாவிகளே . !

#அந்த பிஞ்சுகளின் மரண ஓலம் உய்விக்காது உங்களை#

Vimal Kulanthaivelu

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *