Wednesday, November 22, 2017

.
Breaking News

தாய்மையின் விளக்கம் உன்னிடமே!… கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்.

தாய்மையின் விளக்கம் உன்னிடமே!… கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்.

ஒளிதரும் மெழுகின் உன்னதமே – எங்கள் 
பாச உணர்வின் உறைவிடமே
அறுசுவை உணவின் பிறப்பிடமே – நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே

கருவைச் சுமந்த நாள் முதலே – உன்
உருவம் காணத் துடித்திருந்தேன்
பனிக்குடம் உடைத்துப் பிறப்பித்தாய் – நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்

நெஞ்சில் பதிந்த கல்வெட்டு – உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை –உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *