Sunday, February 18, 2018

.

கலை இலக்கிய ஆளுமையாளருக்கான விருதும் நூல் அறிமுகமும்!

கலை இலக்கிய ஆளுமையாளருக்கான விருதும் நூல் அறிமுகமும்!

ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் 14.10.17 அன்று, நீண்ட பல ஆண்டுகளாக ஜேர்மனியில் கலை இலக்கிய பணியாற்றிய ஆளுமையாளர்களான கவிஞர் .முகில்வாணன் அவர்கள், எழுத்தாளரும் வில்லிசை வேந்தனுமாகிய நாச்சிமார் கோவிலடி த.இராஜன் அவர்கள்,எழுத்தாளரும்; கவிஞருமாகிய பசுபதிராஜா அவர்கள், டென்மார்க்கில் வாழும் எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்கள் ஆகியோருக்கு பட்டயமளித்து கௌரவித்ததுடன் Pஜீவகுமாரன் அவர்களின் “குதிரை வாகனம்” என்ற நூலின் அறிமுகத்தையும்;, ஜேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள தமிழ் அரங்கம் மண்டபத்தில் நடத்தி வைத்தனர்.

கௌரவம் பெற்ற கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா, புத்திசிகாமணி அவர்கள், திருமதி. கீதாராணி பரமானந்தம், அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் உரைகளை ஆற்றியிருந்தனர்.

கௌரவம் பெற்ற கலை இலக்கிய ஆளுமையாளர்களில் ஒருவரான கவிஞர் முகில்வாணன் அவர்கள், தனது உரையின் போது 400 ஆண்டுகால வரலாறு உடைய பிரஞ்சு இலக்கியத்திற்கு அதன் வளர்ச்சியைச் சொல்லுகின்ற வரலாறு உண்டு அதற்கான ஆவணப்படுத்தலும் இருக்கின்றது ஆனால் முதல் சங்கம் தொடங்கி நான்காம் சங்கம் வரை கொண்ட தமிழிலக்கிய வரலாற்றுக்கு ஆவணம் எதுவுமே இல்லையென ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்து உரையாற்றிய நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு த.இராஜன் அவர்கள், 1994 ஆண்டு ஆதவ கிருஸ்ணா நாடக மன்றம் நடத்திய நாடகப் போட்டியில் தனக்குக் கிடைக்க வேண்டிய சிறந்த நடிகருக்கான பரிசு சூழ்ச்சியனால் தடுக்கப்பட்டதாக மிகவும் கோபத்துடனும் கவலையுடனும் கூறி அதைச் செய்தவரின் பெயரையும் குறிப்பிட்டு, அந்நாடகப் போட்டிக்கு தலைமை நடுவராக இருந்தவர் இந்தச் சபையிலிருக்கின்றார் என என்னைச் (ஏலையா க.முருகதாசன்) சுட்டிக்

காட்டினார்.இப்போட்டியில் ஏற்பட்ட குழறுபடிகளை அவர் அறிவார் என என்னை நோக்கி அவர் குறிப்பிட்டார.;

அடுத்து உரையாற்றிய எழுத்தாளரும் கவிஞருமான பசுபதிராஜா அவர்கள், சாதிய அடக்குமுறை பற்றி குமுறும் கோபத்துடனும், கவலையுடனும் கூறி தனது ஆக்கங்களில் பலவற்றை அதற்கு எதிரானதாகவே எழுதி வருவதாக குறிப்பிட்டார்.

அடுத்து “குதிரை வாகனம்” நாவல் அறிமுக நிகழ்ச்சியின் ஆரம்பமாக நாவலுக்கான அறிமுகவுரையை திருமதி.கௌசி சிவபாலன் ஆற்றியிருந்தார். அவர் முழு நாலையும் வாசித்தமை, நாவலில் ஆங்காங்கே தான இரசித்து உள்வாங்கியதை மிகவும் இரசணையுடன் வெளிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஏற்புரை ஆற்றிய ஜீவகுமாரன் அவர்கள், தான் இதுவரை எழுதிய ஆக்கங்கள் பற்றியதும் அவற்றின் உள்ளடக்கம் எவ்விலக்கை நோக்கி இருந்தது என்பதுடன் குதிரை வாகனம் நாவலில்

பண்டாரவளை சண்முகத்தார் பரம்பரையின் பரம்பரை அடையாளமாக குதிரை வாகனமே கதைககரு எனக் கூறிய அவர் நாவலுக்கும் சிறுகதைக்குமுள்ள வேறுபாடு பற்றி ஒப்பிடுகையில் சிறுகதை என்பது ஒருநாளில் நடந்து முடியும் துடுப்பாட்டம் போன்றதுடன் நடுவிக்கட்டை வீழ்த்தி வெற்றி பெறுவது போன்றது, ஆனால் நாவல் பலபேர் சேர்ந்து விளையாடும் உதைபந்தாட்டம் போன்றது என்று கூறி புத்தி சொல்லும் இலக்கியத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார்.

இவ்விழாவில், மண் சஞ்சிகையின் ஆசிரியரும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமாகிய வ.சிவராசா அவர்கள் உரையாற்றுகையில் இதுவரை ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் செயலாற்றிய நூல் வெளியீடுகள்,நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துகஇ கூறினார்.

கவிமணி த.குகதாசன் வாழ்த்துரை ஆற்றினார். ஏலையா க.முருகதாசன், வி.சபேசன் ஆகியோரின் வாழ்த்துக்களும் இடம்பெற்றன.

செய்தி: ஏலையா க.முருகதாசன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *