Sunday, February 18, 2018

.

இரண்டு அழகிகளும் நானும்….! சிறுகதை — } ஏலையா க.முருகதாசன்.

இரண்டு அழகிகளும் நானும்….! சிறுகதை — } ஏலையா க.முருகதாசன்.

கனடாவிற்கு எனது அண்ணன் குடும்பத்தைப் பார்க்கப் போவதற்காக டுசில்டோப் விமான நியைத்தில் உள்ள சோதனை செய்யும் வரிசையில் நின்ற போது எதேச்சையாக எல்லோரையும் பார்த்த போது எனது வரிசைக்கு சமாந்தரமாக இருந்த வரிசையிலிருந்த இரண்டு பெண்கள் மீதும் எனது கண்கள் குத்திட்டு நின்றன.

ஒருவர் இளம் பெண் வயது முப்பது இருக்கும்.றோஸ் வண்ணத்தில் அரைக்காற்சட்டை போட்டிருந்தாள். மேல் சட்டையும் றோஸ் கலரிலேயே போட்டிருந்தாள். மிகவும் அழகான இளம் பெண்;.மற்றப் பெண்ணுக்கு கிட்டதட்ட அறுபது வயதிருக்கும்.அந்த வயதிலும் அவர் அழகாககத்தான் இருந்தார். இளமையில் அழகாய் இருப்பது இயற்கைதானே என இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணைப் பார்த்து நினைத்துக் கொண்ட நான் அறுபது வயதான பெண்ணும் வயதுக்கு ஏற்ற வனப்புடன் இருப்பதைப் பார்த்து, இவள் இளமையில் அதிரடி அழகியாக இருந்திருப்பாள் என நினைத்துக் கொண்டேன். என்னுடைய இரண்டு கண்களும் சொல்வழிக் கேட்க மாட்டேன் என்பது போல அடிக்கடி அவர்களிருவரையுமே பார்த்தது. அவர்களிருவரும் எதேச்சையாக என்னைப் பார்த்தார்கள்.அவர்கள் பார்த்த போது நான் அப்பொழுதுதான் அவர்களைப் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டேன். இந்த பார்வை சங்கமிப்புக்கும் அவர்களைப் பற்றிய எனது நினைப்புக்கும் அரை நிமிசங்களே சென்றிருக்கும். அதற்கிடையில் எனது கைப்பை சோதனைப் பொறிக்குள்ளாக அந்தப் பக்கம் போய்ச்சேரவும் அந்தப் பக்கத்தில் எனது கைகளை உயர்த்தி உடல் பரிசோதனை முடிய கைப்பையும் தூக்கிக் கொண்டு கனடா போகும் லுப்தான்சா கதவு எண் இருக்கும் இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் அந்த இரு அழகிகளைப் பற்றிய நினைப்பு மட்டும் விட்டுப் போகவில்லை. இவர்களும் நான் போகும் விமானத்தில்தான் வருவார்களோ என்ற எண்ணத்துடன், விமானத்திற்குள் ஏறுவதற்கான பயணச் சீட்டு பரிசோதனை முடிந்து விமானத்திற்குள் யன்னலுக்கு அடுத்த இருக்கையில் எனக்கான இலக்கச் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

சில விநாடிகள் செல்ல வரிசையில் பார்த்த அறுபது வயது மதிக்கத்தக்க பெண் யன்னல் ஓரத்து இருக்கையில் குன்ராக் என்று சொல்லியவாறு வந்து அமர்ந்தாள்.அட இவளும் இதில்தான் வருகிறாளா என நினைத்துக் கொண்டேன். அவள் பூசியிருந்த பேர்புயூம் என் முகத்தை ஒரு முறை சுகந்தமாக தடவிச் சென்றது.ஓரிரு விநாடி செல்ல எனது இடது பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்தாள், திரும்பிப் பார்த்தேன் வரிசையில் பார்த்த அதே…

முப்பது வயது மதிக்கத்தக்க அழகி கலோ என்று சொல்லிவாறு அமர்ந்தாள். அவள் மெதுவாக கலோ சொல்லிய போது அவள் மென்று முடித்த சுவிங்கத்தின் சுகமான வாசனையை எனது மூக்கு உணர்ந்து.

விமானம் புறப்படும் வரை நாங்கள் மூவரும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோமே தவிர எதுவுமே பேசாதிருந்தோம். விமானம் மேலெழுந்து பறக்கத் தொடங்கியதும் மெதுவாகப் பேச ஆரம்பித்தோம். முதலில் நானே பேச்சை ஆரம்பித்தேன். இடது பக்கத்திலிருந்த முப்பதுவயது மதிக்கத்தக்க அழகியிடம் தயங்கித் தயங்கி “நீங்களும் கனடாவுக்கா” என்றேன்.”இல்லை அமெரிக்கா போகிறேன், கனடாவிலிருந்து வேறொரு விமானத்தில் செல்கிறேன்” என்றாள்.”நீங்கள்….” என்றாள் அவள்.”கனடாவுக்கு….” என்ற எனது பதிலைத் தொடர்ந்து “கனடாவிலா இருக்கிறியள்” என்றவளுக்கு வேகமாகவே “இல்லை…இல்லை ஜேர்மனியில்தான்” இருக்கிறேன் என்றவுடன் இதுவரை ஆங்கிலத்தில் பேசியவள் ஜேர்மன் மொழியில் பேசத்; தொடங்கினாள்.

காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்வளின் தொடைகள் இரண்டும் மினுமினுத்துக் கொண்டிருந்தன.கண்களை அதிலிருந்து எடுத்து பேச்சைச் தொடரந்தேன்.”அமெரிக்காவில் வேலை செய்கிறீர்களா அல்லது விடுமுறைக்குச் செல்கிறீர்களா”என்ற போது “எனது காதலர் அங்குதான் இருக்கிறார், அவரைப் பாரக்கப்; போகிறேன்

என்றவளிடம்”கனடாவில் எனது அண்ணனுடைய குடும்பத்தைப் பார்க்கப் போகிறேன் என்று அவள் கேட்காமலேயே சொன்னேன்.

நான் முப்பது வயது அழகியுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்ததை அவதானித்த எனது வலது பக்கத்தில் இருந்த அறுபது வயது அழகி தனது தோள்பட்டையால் என் தோளை மெதுவாக இடித்துக் கொண்டே “கலோ நானும் ஒரு அழகிதான், அந்த அழகியைவிட அந்த காலத்தில் நான் பேரழகி தெரியுமா, இப்பவுந்தான் நான் அழகி என்னுடனும் பேசலாமே” என்றாள். இதனைச் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு சிரிப்பு ஒருபுறம் இப்படி யதார்த்தமாக இருக்கிறாளே என்ற வியப்பு ஒரு புறமுமாக அவளுடன் பேசத் தொடங்கினேன். அறுபது வயது அழகி பேசியதைக் கேட்டதும் முப்பது வயது அழகி கிலுக்கென்று சிரித்துவிட்டாள்.தலையை ஒருக்களித்தவாறு வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். அறுபது வயதழகி குறும்புத்தனமாக “இவருடன் பேச அனுமதிப்பியா” என்றாள். முப்பது வயதழகி” ஏன் என்னிடம் அனுமதி கேட்கிறீர்கள், பேசுங்கள்”; என்றாள்.

குறும்புக்கார அறுபதுவயதழகியிடம்” நீங்கள் அந்தக் காலத்தில் பேரழகியாக இருந்த போது உங்களுக்கு ஆண் நண்பர்கள் இருந்திருப்பார்களே” என்று நான் முடிக்குமுன் “இருந்திருப்பார்களே அல்ல இருந்தார்கள் எல்லோருமே எனது மனதைவிட எனது உடம்பிலேயே கண் வைத்திருந்தார்கள்” சொல்லிவிட்டுச் சிரித்தாள்.இதற்கிடையில் விமானப் பணிப் பெண்கள் முதல் உணவாக கோப்பி, தேநீர்,வைன், அத்துடன் கேக்கையும் கொடுக்கத் தொடங்கினார்கள் நாங்கள் மூவரும் சிவப்பு வைனை வாங்கி மெதுவாக குடித்துக் கொண்டிருந்தோம்.தனது காதல் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.நண்பர்களுடன் ஒத்துப் போகததால் மெதுவாக ஒவ்வொருவராக விட்டுச் சென்றார்கள்.அதற்குப் பிறகு எனக்கு ஒரு காதலன் கிடைத்தான் என்றவள் அறுபது வயதழகி சிவப்பு வைனை மெதுவாக குடித்துவிட்டு கதையைத் தொடர்ந்தாள்.

அவள் கதையைச் சொல்லிய விதம் இரசிக்கும்படி இருந்ததால் முப்பது வயதழகி அவள் பக்கம் முகத்தை திருப்பி நாடியில் கைவைத்தபடியே ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினாள். அறுபது வயதழகி தனது காதல் கதையைத் தொடர்ந்தாள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது காதலனுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குப் போகும் வரை எனக்கும் எனது கணவனுக்குமிடையில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் வரவில்லை. எனது அழகையும் என்னுடல் கட்டுக்கோப்பையும் தக்க வைப்பதில் நான் அதிக கவனம் செலுத்தினேன். சிறு சிறு விடயங்களுக்கு எல்லாம் என்னுடன் சண்டை போடத் தொடங்கியவர் நாளடைவில் விவாகரத்துச் செய்து கொள்வோம் என்ற நிலைக்கு வந்து விவாகரத்தும் செய்து கொண்டோம்.காமத்தை இளமையில் மட்டுந்தான் அனுபவிக்கலாம் என எனது கணவர் மட்டுமல்ல, பலரும் நினைக்கிறார்கள். உடலைக் கவனமாகப் பார்த்துக் கொண்டால் எண்பது வயதுவரைகூட அனுபவிக்கலாம்.அது எனது கணவருக்கு புரியவில்லைப் போலும்.எனது கணவர் இன்னொரு நண்பியைத் தேடிக் கொண்டார். அந்த நண்பியையும் அவளின் வயது ஏற துரத்திவிடலாம்.

நீ கண்வெட்டாமல் பார்த்துக்: கொண்டிருத்தியே அவளின் தொடையை அதைவிட மினுமினுப்பாக இருக்கும் எனது தொடைகள்.நான் சாடைமாடையாக பார்த்ததை முப்பது வயதழகி அறிந்து கொண்டால் என்றாலும் அதை அவள் பெரிதாக எடுக்கவில்லை.

“அது சரி நீங்கள் திருமணமானவரா”என்று அறபது வயதழகி கேட்டதும்நான்”ம்…..ம்…ம்…” என்று இழுத்தேன், உடனே அவள் திருமணம் ஆனதைச் சொல்லத் தயங்குகிறீர்களா என படக்கென்று கேட்டாள்.ஆண்களில் பலர் “உங்களைப் போலத்தான் அழகிகளுக்கு அருகில் இருந்தால் பொய் சொல்வார்கள்” என்றதும் எனது முகத்திரை கிழிந்தது போலாகிவிட்டது.

அவள் தொடர்ந்தாள் “நான் கனடா வன்கூவரில் இருக்கும் எனது ஆண் நண்பரிடம்

போகிறேன்.ரொரன்றோவில் இறங்கி வன்கூவருக்கு இன்னொரு விமானத்தில் போக வேண்டும் என்றாள்.விமானம் முகில்களில் மிதந்து செல்வது போல உணர்ந்தேன். முப்பது வயதழகியுடன் ஒப்பிடுகையில் அறுபது வயதழகி ஒன்றும் அழகில் மோசமில்லை.அவளும் அழகியாகவே இருந்தால் இரு அழகிகளுக்கு மத்தியில் சிவப்பு வைனைக் குடித்தவாறு இருப்பது ஒரு சுகமாகத்தான் இருந்தது.

கனடாவிற்கு போய்ச் சேர்ந்து இரண்டு கிழமைகளுக்கு பிறகு ஸ்காபுறோ நகரில் ஒரு கடைத்தொகுதியில் ரிம்கோட்டன் கோப்பிக் கடையில் கோப்பியை வாங்கிக் கொண்டு போய் கோப்பியை குடிக்கத் தொடங்கிய போது “கலோ ” என்று ஒரு பெண்ணின் குரலைக் கேட்டுத் திரும்பினேன் விமானத்தில் என்னுடன் பயணித்த அந்த முப்பது வயதழகி கோப்பிக் குவளையுடன் எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.அவளை நான் கனடாவில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை” நீங்களா அமெரிக்காவிற்கு போகவில்லையா” என்றேன்.”இல்லை நான் ரொரன்றோவில் அமெரிக்க விமானத்திற்காக காத்திருந்த போது, “நீ அமெரிக்கா வர வேண்டாம், நான் திருமணம் செய்துவிட்டேன் ” என்று குறுஞ்செய்தி வந்தது நான் போகவில்லை,என்னை அவன் ஏமாற்றிவிட்டான் துரோகி”என்று கோபத்துடனும் கவலையுடனும் சொன்னான்.”அமெரிக்கா பெண்ணையா திருமணம் செய்தான்” “இல்லை இலங்கைத் தமிழ்ப் பெண்ணை”என்றவள், “நீங்கள் திருமணமானவராக இல்லாதிருந்தால் உங்களை திருமணம் செய்து புகைப்படம் எடுத்து பாரடா நானும் திருமணம் செய்துவிட்டேன் என்று அந்தத் துரோகிக்கு அனுப்பியிருப்பேன்” என்றவள் கோப்பியை குடித்தவாறு எழுந்தாள்.நான் குடித்து முடித்த கோப்பிக் குவளையை குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு அவளுடன் நடந்து கடைத்தொகுதியை விட்டு வெளியே வந்தேன்.

எனக்கு கைலாகு கொடுத்து விடைபெறும் போது “இன்னும் இரண்டு நாட்களின் பின் ஜேர்மனிக்கு சென்றுவிடுவேன். நீங்கள் ஜேர்மனிக்கு வந்தவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்” என்றவள் எனது கைத்தொலைபேசி இலக்கத்தைக் கேட்டு தனது தொலைபேசியில் பதிந்து கொண்டாள். விடைபெறும் போது ஏறிட்டுப் பாரத்தேன் முகம் சிவந்து கண்கள் கலங்கியிருந்தன.அவள் ஒரு பெருமூச்சுடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

காதலும், திருமணமும், ஏமாற்றுதலும் சிலருக்கு சாதரணமாகிவிட்டன என்ற நினைப்புடன்” நீங்கள் திருமணமானவராக இல்லாதிருந்தால் உங்களைத் திருமணம் செய்து…..” என்று அவள் சொல்லிய வார்தைகளும் எனக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க”அண்ணன் வீட்டுக்குப் போகவிருக்கும் பேருந்தை தேடிப் போய்க் கொண்டிருந்தேன்.

பெரும் அலையொன்று எழுந்து பின் அமைதியாகும் கடல் போல சந்திப்புகள் பலவாக இருந்தாலும் சபலத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற திடம் எனக்குள் பெரும் மலையாக எழுந்தது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *