Wednesday, November 22, 2017

.
Breaking News

நானறியேன் பராபரமே!… சங்கர சுப்பிரமணியன்.

நானறியேன் பராபரமே!… சங்கர சுப்பிரமணியன்.

வலுவான கால்கள் வேண்டாம்

நடக்க ஓட இயலாது போனாலும்
எழுந்து அமர உதவியாயிருந்தால்
அது போதும் மிக அகமகிழ்வேன்
பெரிதாக வேலைகள் செய்ய எனக்கு கைகள் வேண்டாம்
அன்றாட தேவைதனை கவனிக்க
கைகள் இருந்தால் அது போதும்
நல்ல கண்பார்வை கூட தேவையில்லை
என் உடன்பிறப்புக்கள் படும் வேதனை காணாதிருந்தால் அது போதும்
செவிப்புலன் இயங்காது போனாலும் பரவாயில்லை
என் இனமக்கள் அவல ஓலம் மட்டும் கேட்காது போனால் சரி
வாய்பேச முடியாது போனாலும் பரவாயில்லை
உரிமைக்கு குரல் கொடாத வாயிருந்து ஏதுபயன்
முகரும் சக்திதனை என் நாசி இழந்திடினும் கவலையில்லை
என்மக்கள் உதிர்க்கும் இரத்தநெடிதனை உணர்ந்து என் கண்கள் கலங்காதன்றோ
தொடு உணர்ச்சியற்று நான் மரத்து போனாலும்
உயிரற்று வீழ்ந்து கிடக்கும் உறவுகளை தீண்டி அழ தேவையில்லை
இது மட்டும் கிடைத்தாலே போதுமென்பேன்
எல்லா அவயங்களையும் நன்று பெற்ற மாந்தரெலாம்
அவை கொண்டு ஆனந்தமாய் வாழ்தல்விட்டு
வீடுபேற்றைக் கேட்டுமிங்கு வீணாய் கிடக்கின்றாரே
அங்கே சென்று ஏது செய்வார்
யாதொன்றும் நானறியேன் பராபரமே!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *