Thursday, December 14, 2017

.
Breaking News

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி!

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி!
தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) நாடு முழவதும் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். . தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகையை வெகு உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, அதிரசம், லட்டு, முறுக்கு என விதவிதமான பட்சணங்களைச் செய்து அவற்றை நரகாசூரணுக்குப் படைத்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும், தீபாவளிப் பண்டிகையை களைகட்டச் செய்யும் பட்டாசுகளை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில்  வாஷிங்டன் வெள்ளை மாளிகையில்  டொனால்டு டிரம்ப் தனது முதல் தீபாவளியை இன்று கொண்டாடினார். நாட்டில் விஞ்ஞானம், மருந்து, வர்த்தகம் மற்றும் கல்விக்கு இந்திய அமெரிக்கர்களின் அசாதாரண பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் பாரட்டினார்.
டிரம்ப் தனது நிர்வாகத்தின் மூத்த இந்திய அமெரிக்க உறுப்பினர்கள், நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மற்றும் சீமா வர்மா நிர்வாகி, சென்டர்ஸ் பார் மெடிகேர் மற்றும் மெடிக்கிடிட் சர்வீசஸ் ஆகியோருடன் இணைந்து ஜ்கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில்  அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் தலைவர் அஜித் பாய்,முதன்மை துணை பத்திரிகை செயலாளர் ராஜ் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாம் தீபாவளியை கொண்டாடுவது மூலம்  மிகப்பெரிய ஜனநாயக நாடான   இந்து மதத்தின் வீடான இந்திய மக்களை நாம் நினைவில் கொள்கிறோம்.  அமெரிக்க இந்தியர்கள் மற்றும் நண்பர்கள் நாட்டிற்கு மிகப்பெரிய  பங்களிப்பை செய்துள்ளனர்
பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது “மிக வலுவான உறவை” குறிப்பிட்டார் டிரம்ப்.
 கொண்டாட்டத்தில் டிரம்ப்பின் மகள் இவாங்காவும் கலந்து கொண்டார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *