Thursday, January 18, 2018

.
Breaking News

ஆர்.கே.நகரில் மீண்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டி!

ஆர்.கே.நகரில் மீண்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த தொகுதியில் கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் பணப்பட்டு வாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க.வில் எடப்பாடி அணியும், தினகரன் அணியும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன.

நாம் தமிழர் கட்சியும் ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிடுகிறது. இதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக போட்டியிடும். கடந்தமுறை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயமே அங்கு மீண்டும் போட்டியிட உள்ளார். எங்களது பலம் என்ன? என்பதை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம்.

இந்த முறையும் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வார்கள். அதனை மக்கள் முறியடித்துக் காட்ட வேண்டும்.

அ.தி.மு.க.வினர் ஆண்டு விழா நடத்துவதற்கு பதில் மூடு விழா நடத்தலாம். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிர் பலி அதிகரித்துள்ளது. அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக உள்ளன. மக்களை பற்றி இந்த அரசு சிந்திக்காமலேயே உள்ளது. அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு சீமான் கூறினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *