Wednesday, November 22, 2017

.
Breaking News

வருவாய் தீபாவளியே!… சங்கர சுப்பிரமணியன்.

வருவாய் தீபாவளியே!… சங்கர சுப்பிரமணியன்.

பால்போல் அவள் முகம் பரவசப்படுத்த

பூப்போன்ற அவள் இதழொளி அவனை இழுக்க
மொட்டை மாடியில் மடிதனில் அவள் கிடக்க
எட்டா உயரத்தே எரிந்துமே பட்டாசு வெடித்துச் சிதற
வெடித்த சத்தத்தால் வெருட்டென எழுந்த அவளும்
பயத்தால் நடுங்குவதுபோல் பாங்காய் அவனைப்பற்ற
பயத்தைப் போக்கிட அவனும் பக்குவமாய் அணைக்க
அணப்பின் சுகமதிலே அகிலத்தையே மறந்தவேளை
மாடிப்படியேறி வந்த மைத்துணி அத்தான் என அழைக்க
அணைப்பின் பிடியிலிருந்த அவள் சட்டென அவனை விட்டகல
பிடியிலிருந்து விலகினாலும் உடல் மொழி உணர்த்த
உணர்ந்தவளின் முகமோ சற்று குனிந்தது வெட்கத்தாலே
வெட்கம் வந்தபோதும் சொல்ல வேண்டயதை சொன்னாள்
காலையில் சீக்கரமே எழவேண்டும் கீழே வந்துபடுங்களென்றே
அம்மா அப்பா சொன்னதாக அவள் சொல்லிவிட்டு மறைந்தாள்
அவன் அவளைப்பாரக்க அவளும் அவனைப் பார்க்க
கீழிருந்து மேலே எழுந்து வந்த பூந்தொட்டி ஒளியில்
பூவையவள் முகமோ பொலிந்தது
நாணத்தால் சிவந்தே
என்ன ஒரு இன்பம் இத்தீபாவளி தந்திடும் இன்பம்
மாமனார் வீட்டு தலைத்தீபாவளி தரும் இன்பம் இதுபோல
மற்றவர்க்கும் இன்பம் தந்திடவே வருவாய் இன்பத் தீபாவளியே
என்று எண்ணி அவனும் இனியவளை அணைத்தபடியே
இறங்கி வந்தான் மாடிப்படியில்
மாடியிறங்கி வந்த மகள் மதிமுகம் கண்டு மகிழ்ந்த பெற்றோர்போல்
எல்லோர் மனமும் மகிழ்ந்து கொண்டாட வருவாய் தீபாவளியே!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *