Monday, December 11, 2017

.
Breaking News

குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட 156 கைதிகளுக்கு பரோல்!

குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட 156 கைதிகளுக்கு பரோல்!

மதுரை மத்திய சிறையில் 500-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இங்கு தனியாக பெண்கள் சிறையும் உள்ளது.

தண்டனை காலம் முடிந்து விடுதலையாகும் கைதிகள் திருந்தி வாழ சிறைத்துறை நிர்வாகம் சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி, சுயதொழில், நல்லொழுக்கம் போன்றவை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட பெண்கள் உள்பட ஏராளமான கைதிகள் பரோல் கேட்டு சிறைத்துறை சூப்பிரண்டிடம் விண்ணப்பித்தனர். அவர்களது மனுவை சிறைத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

கைதிகள் பாதி தண்டனை காலத்தை கழித்திருக்கிறார்களா? சிறை நடத்தை விதிகளை பின்பற்றி இருக்கிறார்களா? சிறையில் ஏதேனும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டார்களா? என ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 156 கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்படி வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந் தேதி (வியாழக்கிழமை) வரை அவர்களுக்கு 5 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து மறுநாள் (19-ந் தேதி) மாலையில் மீண்டும் கைதிகள் சிறைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *