Monday, October 23, 2017

.
Breaking News

பிச்சை எடுத்த ரஷிய பயணிக்கு உதவ சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு!

பிச்சை எடுத்த ரஷிய பயணிக்கு உதவ சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு!

ரஷியாவை சேர்ந்த இவாங்க்ளின் (வயது 24) காஞ்சீபுரம் பகுதிக்கு சுற்றுலா வந்த போது அவருடைய ஏ.டி.எம். கார்டு முடங்கியது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கு செல்ல பணம் இல்லாமல் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

இது பற்றி அறிந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். முறையான ஆவணங்கள் இருந்ததால் அவருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பினர். இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் நேற்று முன்தினம் வெளியானது.

இதை அறிந்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ரஷிய பயணிக்கு உதவ ஏற்பாடு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியா, இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு. அந்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. அவருக்கு உதவ சென்னையில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *